சுற்றுச்சூழல் அழிந்துவிடும் நிலையை நாம் அனைவரும் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஒரு காலத்தில் பசுமையினால் போர்த்தப்பட்ட காடுகள் வெட்டப்பட்டு வெறுமையாக காணப்படுவதும், தூய நீர் மாசடைந்துள்ளதும், தூய காற்று மாசுபட்டுள்ளதும், போக்குவரத்து நெரிசல், குப்பைகள், சுகாதாரக் கேடுகள் என அனைத்தையும் அனுபவித்து வருகிறோம். கடுமையான கோடை நாட்கள் அதிகமாவதையும், தவளைகள் சப்தம் எழுப்பாத இரவுகளையும் உணர்கிறோம். இதுமட்டுமல்லாமல் நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவிலும் சிறிது நஞ்சையும் சேர்த்தே உணர்கிறோம். சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மூன்றுவிதமாக அணுக முடியும் உடனடிப் பிரச்சனைகள், நீர்மாசுபாடு, மண் அரிமானம், திடக்கழிவுகள் சேருதல், மேய்ச்சல் நிலம் சம்பந்தமான பிரச்சினைகள், சிற்றினங்கள் அழிவு போன்றவற்றை சமுதாய அளவில் சரிசெய்து கொள்ளுதல். அமிலமழை, காடழிப்பு, வெள்ளம், காற்று மாசுபாடு போன்ற வட்டார அளவிலான பிரச்சனைகளை சரிசெய்ய தேசிய அளவில் அனுகலாம். உலகளாவிய பிரச்சனைகளான புவிவெப்பமயமாதல், ஓசோன்படலம் பாதிக்கப்படுதல் போன்றவற்றை சரிசெய்ய உலக நாடுகளை ஒருங்கிணைத்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதன் முலம் சீர் செய்யலாம். உலகளவில் சிந்தித்து உன் அளவில் செயல்படு உள்ளூர் அல்லது மாநில அளவிலான எந்தவித சுற்றுபுறச்சூழல் பிரச்சனைகளையும் உலகளாவிய பிரச்சனையாக கருத வேண்டும். உலகளவில் சிந்தித்து, உன் அளவில் செயல்படு என்பது எல்லோருக்கும் உண்டான பொன்மொழியாகும். கல்வி - வருங்கால பாதுகாப்பிற்கு சிறந்த வழி கல்வி மிக முக்கியம் ஏனெனில் நிலையான வாழ்க்கைக்கு தேவையான கொள்கை மாற்றம், சிந்தனை மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவருபவை. ஆதார மூலங்களை அளவாக கையாள்வது, நிலையான உற்பத்தி, மற்றும் உபயோகம் போன்றவற்றிற்கு தேவையான அறிவை கொடுக்கும். மொத்த சமுதாயத்தினரிடமும் நிலையற்ற வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும். சமுதாயத்தினருக்கு சரியான வழிகாட்டி, உள்ளூர் பிரச்சனைக்களுக்கு நிலையான வழிமுறைகளை வகுக்க உதவும். விழிப்புணர்வு மற்றும் தகவல் மூலம் நிலையான மேம்பாட்டிற்கு ஆதரவு பெற முடியும். நிலையான மேம்பாட்டிற்கான சிந்தனை நிலையான மேம்பாட்டை அடைய மாற்று சிந்தனை மற்றும் புதிய கொள்கைகள் மிக அவசியம். மனித உரிமை, பூமியின்மீதும் வருங்கால சந்ததியினர் மீதும் அக்கறை கொள்ளல் போன்றவை முக்கியமாகும். நிலைத்த மேம்பாட்டை அடைய நாம் ஒவ்வொருவரும் பிரதிநிதிகளாக இருந்து செயல் ஆற்றுவோம். நிலைத்த வாழ்க்கைக்கான வழிமுறைகள் பூமியின் சூழலை காப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும். மனிதனின் சூழல் தொடர்பற்ற தன்மை தனிமனிதச் செயலை பின்னடையும்படி செய்யும். எரிபொருள் பாதுகாப்பு தேவையற்ற சமயங்களில் மின்விசிறி மற்றும் மின்சார விளக்குகளை நிறுத்தி வைக்கவும். நல்ல காற்று கிடைக்கும் இடத்தில், குளிர்சாதன பெட்டியை நிறுத்தி வைக்கவும். கூடுமானவரை மின்சார பொருட்களின் உபயோகத்தை தவிர்க்கவும். நீர் பாதுகாப்பு கூடுமானவரை நீரை தேவைகேற்றபடி பயன்படுத்தவும். ஒழுகும் நீர் குழாய்களை உடனடியாக பழுதுபார்க்கவும். நீர்நிலைகளை மாசுபடுத்தாதீர்கள். மழைநீரை சேகரியுங்கள். மரங்களை காப்பாற்றுங்கள். பேப்பர் மற்றும் பேப்பர்களாலான பொருட்களின் உபயோகத்தை குறைக்கவும். உபயோகித்த பேப்பர்களை மறுசுழற்சி செய்யவும். மரம் வளர்ப்போம் அதனை பாதுகாப்போம். காற்றை தூய்மையாக வைத்திருத்தல். புகை பிடிப்பதை நிறுத்துதல். பேப்பர் மற்றும் குப்பைகளை எரிக்காதீர்கள். வாகனங்களில் புகை வடிகட்டிகளை உபயோகிக்கவும். சரியான முறையில் வாகனங்களை பராமரிக்கவும். தொழிற்சாலையில் மாசுகட்டுபாடு மற்றும் சுத்திகரிப்புக்கான வழிமுறைகளை மேற்கொள்ளவும். மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் நீர் தட்டுப்பாடு தவிர்க்கப்படுகிறது. வண்டல் படிவுகள் அதிகம் சேர்வது தடுக்கப்படுகிறது. மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. வனவளமும் விவசாய உற்பத்தியும் அதிகரிக்கிறது. செயற்கை உரங்களின் தேவை குறைகிறது. நீர்நிலைகளின் மாசுபாடு குறைகிறது. மழையளவு அதிகரிக்கிறது. பசுமைக் குறியீடு மறுசுழற்சி செய்ய இயலாத, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் வகை பொருட்களை தவிர்க்கவும். காகிதத்தில் செய்யப்பட்ட டம்ளர்கள், தட்டுகள், கைகுட்டைகள் ஆகியவற்றை மாற்றி உலோகத்தில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தவும். துடைப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும், உரங்களாக பயன்படுத்தவும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தவும். விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உங்கள் குடும்பத்தினர்க்கு எவ்வாறு சூழலை ஒட்டி வாழ முடியும் என்பதை விளக்கவும். பொதுமக்களின் ஆதரவை திரட்டி சுற்றுச்சூழலுக்காக போராடவும். உள்ளூர் அரசாங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவும். சூழலுக்கு ஆதரவான வாழ்க்கை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சூழல் பாதுகாப்பில் ஒரு முன்னுதாரணமாக திகழவும். ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்