நகர்புற திடக்கழிவுகளின் உற்பத்தி மற்றும் சேகரிப்பு

இந்தியாவில் 291 ‘முதல் வகுப்பு நகரங்கள்’ மற்றும் 345 ‘நடுத்தர வகுப்பு நகரங்களில்’ அதிகபட்சமாக 52,000 டன் திடக்கழிவுகள் நாள் ஒன்றிற்கு வெளியேற்றப்படுகிறது. இதில் தனிநபர் பங்கு ஒரு நாளைக்கு 346 கிராம் ஆகும்.

ஒரு நாளில் 2,832 டன் திடக்கழிவுகள் மட்டுமே பாதிக்காத வகையில் சீர் செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஒருநாள் ஒன்றிற்கு சராசரியாக ஒரு தனி நபரால் சிறிய நகரங்களில் 100 கிராம் முதல் பெரிய நகரங்களில் 500 கிராம் வரை திடக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதில் 13% முதல் 20 % வரை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள். இந்தியாவில், பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி, ரப்பர், இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகம் போன்றவற்றை பிரித்தெடுத்து அவற்றை குறைந்த விலை பொருட்களாக மாற்றி நடுத்தர சமுதாயத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் 70% நகர்புற கழிவுகளை அப்புறப்படுத்தமுடியாமல் அவை திறந்தவெளியில், அழுகியும், ஆடு, மாடுகளால் உண்ணப்பட்டும், சாக்கடையில் சென்று அடைத்து கொள்வதும், சிலநேரங்களில் எரியூட்டப்படுவதும் நிகழ்கிறது.

நாள் ஒன்றுக்கு தனிநபர் 150 லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். 1947ல் இந்தியாவின் மொத்த கழிவுநீர் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 5 பில்லியன் லிட்டர் ஆக இருந்தது. 1997ல் நாள் ஒன்றுக்கு 30 பில்லியன் லிட்டராக உயர்ந்தது. இதில் 10% கழிவுநீரே சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டது.

குப்பைகளை குறைத்தல் - இதுவே நிலையான முடிவு

குப்பைகளை ஏதாவது ஒரு வழியில் குறைப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

பேப்பர், பாட்டில், உலோகம் மற்றும் சில பிளாஸ்டிக் வகைகளை, மறுசுழற்சி செய்வதுடன், சிலவற்றை மறுஉபயோகமும் செய்யலாம்

பொருட்களை வாங்கும் பொழுது அவை மறுஉபயோகம் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களாக பார்த்து வாங்கவும்.

எஞ்சிய உணவு மற்றும் சமையல் அறை கழிவுகளை உரமாக்குவதன் மூலம் பயிர் அறுவடையின்போது பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் திரும்ப பூமிக்கே சேர்க்கப்படுகிறது.

ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்