நீர் பரிசோதனை நீர் என்பது முக்கிய ஆதாரமாகும். உலக தண்ணீர் 20ம் நூற்றாண்டில் விவசாய உற்பத்தி திறன் வியத்தகு வளர்ச்சியை கண்டுள்ளது. உலக தண்ணீர் பயன்பாட்டில் 70சதவீதம் நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. “நீரின்றி அமையாது உலகு” “நீரின்றி செழிக்காது விவசாயம்” என்ற சொல்லின் படி நீர் என்பது வோளண்மை தொழிலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய நிலவரப்படி. உலக மக்கள் தொகையானது 2030 க்குள் 2 மில்லியனை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உலக மக்கள் அனைவருக்கும் உணவு வழங்க கூடிய வேளாண்மை தொழிலுக்கு நீர் என்பது அத்தியவசியமானது அத்தகைய நீரினை பாதுகாக்கவேண்டியது அனைவரின் கடமையாகும். நீரில் உள்ள தாது உப்புகள். உலோகங்கள் போன்றவற்றின் விகத சாரங்கள் சரியாக இருக்க வேண்டும். அத்தைகைய நீரை மட்டுமே வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும். இதனால் நீரின் தரத்தை பரிசோதிப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகும். மண் பரிசோதனை நீரினை போன்றே மண்வளமும் வேளாண்மைக்கும் இன்றியமையாத ஒன்றாகும். மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களான நைட்ரஜன் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் (NPK) போன்ற மூன்றும் மண்ணின் வளத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் செயற்கை உரங்கள் பயன்படுத்துவதின் காரணமாக மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகின்றது. உணவே மருந்து ! மருந்தே உணவு! இதனை கருத்தில் கொண்டு இயற்கை உரத்தை பயன்படுத்தி மண்வளத்தை காப்பது அனைவரின் கடமையாகும். எனவே மண் பரிசோதனை என்பது இன்றியமையாத ஒன்றாகும். காற்று இன்றைய காலகட்டத்தில் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. வாகனப்பெருக்கம் தொழிற்சாலை பெருக்கம் போன்றவற்றின் காரணமாக காற்று மாசுபடுதலை தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. காற்றில் 802 No2 8pm, RPM போன்ற தர ஆய்வுகள் முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆதாரம்: சி.பி.ஆர்.சுற்றுச்சூழல் கல்வி மையம்