குளிர் அலையின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. குளிரலைக்கு முன்பு செய்ய வேண்டியவை போதுமான குளிர்கால ஆடைகளை வைத்திருக்கவும். பல அடுக்கு ஆடைகள் பயனுள்ளதாக இருக்கும். அவசரகால பொருட்களை தயாராக வைத்திருங்கள். குளிரலையின் போது செய்ய வேண்டியவை முடிந்தவரை உள்ளரங்கில்/வீட்டினுள் இருங்கள், குளிர்ந்த காற்றால் பாதிக்கப்படுவதை தடுக்க பயணத்தைக் குறைக்கவும். உலர்ந்த துணிகளை உடுத்தவும். ஈரமாக இருந்தால், உடல் வெப்பத்தை இழப்பதைத் தடுக்க, துணிகளை விரைவாக மாற்றவும். கையுறைகள் குளிர்ச்சியிலிருந்து அதிக அரவணைப்பு மற்றும் காப்பு வழங்குகின்றன. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் வாயிலாக, உள்ளூர் வானிலை பற்றிய தகவலை அறிந்து கொள்ளவும். தொடர்ந்து சூடான பானங்கள் குடிக்கவும். வயதானவர்களையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். குழாய்கள் உறையக்கூடும் என்பதால் போதுமான தண்ணீரை வைத்திருக்கவும். உணர்வின்மை, கை விரல்கள், கால் விரல்கள், காது மடல்கள் மற்றும் மூக்கின் நுனி ஆகியவற்றில் வெள்ளை அல்லது உறைபனி அறிகுறிகளைப் பாருங்கள். உறைபனியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெதுவெதுப்பான நீரில் வைக்கவும். தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டியவை ஒரு சூடான இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை மாற்றவும். உடலை தோலுக்கு-தோல் தொடர்பு, உலர்ந்த அடுக்கு போர்வைகள், உடைகள், துண்டுகள் கொண்டு சூடேற்றுங்கள். உடல் வெப்பநிலையை அதிகரிக்க உதவும் சூடான பானங்கள் கொடுங்கள். மது கொடுக்க வேண்டாம். நிலைமை மோசமடைந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள். செய்யக்கூடாதவை மது அருந்த வேண்டாம். இது உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது. உறைபனி பாதித்த பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். இது அதிக சேதத்தை ஏற்படுத்தும். நடுக்கத்தை புறக்கணிக்காதீர்கள். இது உடல் வெப்பத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான முக்கியமான முதல் அறிகுறியாகும் மற்றும் வீட்டிற்குள் விரைவாக திரும்புவதற்கான சமிக்ஞையாகும். குளிர் அலை மற்றும் தரை உறைபனி சார்ந்த விவசாய நடவடிக்கைகள் செய்ய வேண்டியது பயிர்களை குளிர் பாதிப்பிலிருந்து பாதுகாக்க மாலை நேரங்களில் லேசான மற்றும் அடிக்கடி நீர்ப்பாசனம் / தெளிப்பான் பாசனத்தைப் பயன்படுத்துங்கள். இளம் பழ தாவரங்களை சர்கண்டா / வைக்கோல் / பாலிதீன் தாள்கள் / கோணி பைகள் மூலம் மூடி வைக்கவும். நுண்ணிய துளைகளுடைய பாலிதீன் பைகளால் வாழைப்பழங்களை மூடி வைக்கவும். நாற்றங்கால் பராமரிப்பு: நாற்றங்கால் தாவரங்களை இரவில் பாலிதீன் தாளுடன் மூடி, காலையில் அகற்றவும். நர்சரி பயிர்களுக்கு மாலையில் நீர்ப்பாசனம் செய்து காலையில் தண்ணீரை வெளியேற்றவும். கடுகு, மொச்சை மற்றும் பருப்பு போன்ற முக்கியமான பயிர்களை உறைபனி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, நீர்த்த (0.1%) சல்பூரிக் அமிலத்தை (1000 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் H2SO4) அல்லது தயோயூரியா 5௦ பிபிஎம் (1000 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் தயோயூரியா) தெளிக்கவும். உங்கள் பகுதி குளிர் அலைக்கு ஆளானால் விண்ட் ப்ரேக் (windbreak) ஷெல்டெர் பெல்ட் (shelterbelt) மற்றும் அல்லே பயிர்கள் (Alley Cropping) ஆகியவற்றை வளர்க்கவும். பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் தாவரங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளை கத்தரிக்கவும். கத்தரிக்காய் செடிகளில் செப்பு பூசண கொல்லிகளை தெளித்து, நீர்ப்பாசனத்துடன் NPKவை பயன்படுத்துங்கள். செய்யக்கூடாதவை குளிர்ந்த காலநிலையில் மண்ணுக்கு ஊட்டச்சத்து பயன்படுத்த வேண்டாம். வேர் மோசமாக இருப்பதால் தாவரத்தால் ஈர்த்துக்கொள்ள முடியாது. மண்ணைத் தொந்தரவு செய்யாதீர்கள்; தளர்வான மேற்பரப்பு கீழ்பரப்பிலிருந்து வெப்பத்தை கடத்துவதை குறைக்கிறது. கால்நடை வளர்ப்பு செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதவை செய்ய வேண்டியது கால்நடைகளை இரவில் கொட்டகைகளுக்குள் வைத்து, குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்க உலர்ந்த படுக்கையை வழங்கலாம். விலங்குகளுக்கு, தீவனத்தில் புரத அளவு மற்றும் தாதுக்களை அதிகரிப்பது குளிர்ச்சியை சமாளிக்க, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. விலங்குகளுக்கு, கனிம கலவையுடன் உப்பு, கோதுமை மற்றும் வெல்லம்போன்றவற்றை தவறாமல் கொடுங்கள். இது குளிர்காலத்தில் அவைகளின் அன்றாட ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய உதவும். கோழிப்பண்ணையில், கோழி கொட்டகைகளில் செயற்கை ஒளியை வழங்குவதன் மூலம் குஞ்சுகளை சூடாக வைத்திருங்கள். செய்யக்கூடாதவை காலை நேரத்தில் கால்நடைகள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. இரவு நேரங்களில் கால்நடைகள் / ஆடுகளை திறந்தவெளியில் தங்க வைக்கக் கூடாது. ஆதாரம்: வேளாண் வானிலை ஆய்வு பிரிவு