பேரழிவுகளின் நிலைகள்

இயற்கைப் பேரழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

முதல் நிலை விளைவுகள்

உயிர் பலிகள்

பெருமளவில் மனிதன் மற்றும் பிற உயிரினங்களுக்கு காயம் ஏற்படுதல்

வீடுகள், பிற கட்டிடங்கள் பாதிப்படைதல்

விவசாய நிலங்கள் நாசமாதல்

இரண்டாம் நிலை விளைவுகள்

உணவு, நீர் மற்றும் உறைவிடப் பற்றாக்குறை.

இறந்த மனித மற்றும் விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தப் படாத பட்சத்தில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்.

குடிநீர் விநியோகம், போக்குவரத்து கழிவு நீர் வாய்க்கால்கள், சுகாதார அமைப்புகள் போன்ற அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் தடைபடுதல்.

தொழிற்சாலைகள் மற்றும் வியாபார அமைப்புகளின் பணி தடைபடுதல்.

உயிரிழப்பு மற்றும் உறைவிடம் இல்லாதிருத்தல் போன்றவை மனோதத்துவ ரீதியாக பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

நிலம், நீர், காற்று ஆகிய இயற்கை சூழலும் பாதிப்படைகின்றது.

மேற்குறிப்பட்ட இரண்டாம் நிலை விளைவுகளில் சில நீண்ட நாட்களுக்கு நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகள்

1. பூகம்பத்திற்கு முன்பு

வீடு, பள்ளி மற்றும் அலுவலகத்தில் பாதுகாப்பான இடங்களை அறிந்து கொள்ளுதல்.

2. பூகம்பத்தின் பொழுது

படுத்துக்கொள்ளுதல், மறைந்து கொள்ளுதல், பிடித்துக்கொள்ளுதல் என்பவை பூகம்பப் பாதுகாப்பின் தாரக மந்திரமாகும்.

நிற்காமல், தரையில் படுத்துக் கொள்ளுதல்.

திடமான பொருட்கள் (மேஜை, கட்டில்) போன்றவற்றின் கீழ் மறைந்துகொண்டு, அவை நகரும் போது உடன் நகர்தல்.

அதிர்வு நிற்கும் வரை, அவற்றை இருக்கமாக பிடித்து கொள்ளுதல்.

சுவரரையட்டி அமர்ந்து கொண்டு தலையை கால்களுக்கிடையே வைத்து கைகளால் பாதுகாப்பாக மூடிக் கொள்ளுதல். சன்னல், சுவரில் தொங்கும் பொருட்கள், கண்ணாடி போன்றவற்றின் அருகே செல்வதைத் தவிர்த்தல் நலம்.

மரங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் அருகே நிற்க கூடாது.

அடுக்குமாடி கட்டிடங்களில் மின்தூக்கிகளை (லிவீயீt) பயன்படுத்த கூடாது.

வாகனங்களில் சென்று கொண்டிருந்தால் மரம், மின்கம்பம் இல்லாத இடமாக பார்த்து நிறுத்திவிட்டு, வாகனங்களுக்குள்ளேயே அமர்ந்திருத்தல் நல்லது.

3. பூகம்பத்திற்கு பின்பு

சிறிய பூமி அதிர்வுகள், சுனாமி, நிலச்சரிவு போன்ற பூகம்பத்தை தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளுதல்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் முக்கிய தகவல்களை அறிதல்.

மின்சாரம் இல்லாத சமயங்களில், மெழுகுவர்த்தியை பயன்படுத்துவதைத் தவிர்த்து டார்ச் லைட் பயன்படுத்தலாம். ஏனெனில் பூகம்பத்தின்போது வாயுக்கசிவு ஏற்பட்டிருந்தால் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

பதற்றம் இல்லாமல் அமைதியாக இருத்தல் அவசியம். பயந்து, நடுங்கி ஓடுவதாலேயே அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது.

சுனாமி ஏற்படும் முன்

அருகாமையிலுள்ள பகுதிகளில் பூகம்ப நிகழ்வுகளைக் கேள்வியுறும் பொழுதே (தாழ்வான கடரோலப் பகுதிகளில்) சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

இச்சமயங்களில் தாழ்வான கடலோரப் பகுதிகளைக் காலி செய்து சற்று உயரமான பகுதிகளில் தங்கியிருத்தல் நலம்.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் தாழ்விடங்களில் தங்கியிருத்தல் முட்டாள்தனமானது.

உடனடியாக கரையோரப் பகுதிகளைக் காலி செய்ய இயலாத பட்சத்தில் அருகிலுள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்களின் மேல் தளத்திற்குச் சென்று தங்கலாம்.

இயற்கையின் முன்னறிவிப்பு

கடல் மட்டத்தின் ஏற்ற, இறக்கங்களைத் தொடர்ந்து ஆழிப்பேரலைகள் உருவாகலாம்.

கடல் மட்டத்தைக் காண இயலாத இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறான பேரிரைச்சலோடு கூடிய அலையோசையின் மூலம் ஆழிப்பேரலைகளில் வரவை எதிர்பார்க்கலாம்.

1. சுனாமி தாக்கும் பொழுது

புகைப்படம்/வீடியோபடம் எடுக்க கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்தல்.

எச்சரிக்கை அறிவிப்புக்களை தொடர்ச்சியாக வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்ளுதல்.

2. சுனாமிக்குப் பின்

அபாய எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்படும் வரை சுனாமி பாதிப்புள்ள பகுதிகளுக்கு செல்லுவதைத் தவிர்த்தல்.

3. நிலச்சரிவு ஏற்படுமுன்

மலை உச்சி மற்றும் அடிவாரத்தில் கூடுமானவரையில் கட்டுமானப் பணிகளைத் தவிர்த்தல்.

4. முன்னறியும் அறிகுறிகள்

கட்டிடங்களின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்படும்.

கதவு, ஜன்னல், போன்றவை மூட முடியாமல் இறுகிக்கொள்ளும்.

தாழ்வான பகுதிகள் மற்றும் வேலியோரங்களில் நிலப்பகுதி மேலெழும்பி காணப்படும்.

மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் வேலிகள் போன்றவை கீழ்நோக்கி சாயத் தொடங்கும்

தொலைதூரத்தில் பொருட்கள் உருள்வது போல் கேட்கும் சப்தம் நம் இருப்பிடத்தை நிலச்சரிவு நெருங்கிக் கொண்டிருப்பதை அறிவிக்கும்.

வழக்கத்திற்கு மாறாக மரங்கள் அல்லது பெரிய பாறைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் சப்தம் கேட்கும்.

மலைப்பிரதேசங்களில் நடந்து அல்லது வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருத்தல் அவசியம்

5. நிலச்சரிவு ஏற்படும்பொழுது

சரிவின் போக்குப் பாதையிலிருந்து விலகி இருத்தல்.

தப்ப முடியாத சூழ்நிலையில் கைகளைத் தலைக்குப் பாதுகாப்பாக்கி உடலை பந்துபோல் சுருட்டிக் கொள்ளுதல் அதிக பாதிப்பைத் தவிர்க்கும்.

நிலச்சரிவு நின்றபின்

சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து விலகி இருத்தல்.

வானொலி/தொலைக்காட்சி அறிவிப்புக்களைத் தொடர்ந்து கேட்டு கவனித்து வருதல்.

காயம் அடைந்தவர்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு முடிந்த உதவிகள் செய்வதோடு, மீட்பு பணியில் உள்ளவர்களுக்கும் சரியான தகவல்களைக் கொடுத்து உதவலாம்.

நிலச்சரிவை தொடர்ந்து ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம்.

6. எரிமலை வெடிக்கும் முன்

முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்ட உடன் வசிப்பிடங்களை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுதல்.

கூடுமான வரையில், தேவையான உணவு மற்றும் தண்ணீரை வைத்துக் கொள்ளுதல்.

7. வெடிக்கும் போது

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக சென்று பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

எரிமலைக் குழம்பு, சகதி மற்றும் புகை அதிகமுள்ள இடங்களில் மிக அருகில் இருப்பதை தவிர்த்தல் அவசியம்.

ஜன்னல், கதவு, புகைபோக்கி போன்றவற்றை சாம்பல் புகமுடியா வண்ணம் நன்றாக மூடி வைத்தல் அவசியம்.

வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றை குறைந்த வேகத்தில் ஒட்டுதல் நலம்.

வழிந்தோடும் எரிமலையின் அருகில் உள்ள பாலங்களைக் கடப்பதைத் தவிர்த்தல் நலம்.

8. வெடித்த பின்

தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்புக்களை தொடர்ந்து கவனித்தல் அவசியம்.

எரிமலை சாம்பல் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்தல்

வெளியில் செல்லும் போது வாய் மற்றும் மூக்கு பகுதிகளை நன்றாக மூடிக் கொள்ளுதல்

தோல் எரிச்சல் மற்றும் புண்கள் ஏற்படுவதைத் தடுக்க உடல் முழுவதும் மூடியிருக்கும் வகையில் உடைகளை பயன்படுத்துதல்.

காயமுற்ற, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுமான முதலுதவி செய்தல்.

9. சூறாவளி ஏற்படும்பொழுது

சூறாவளி வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில் வீடுகளுக்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது.

கீழ்தள அறைகள், ஜன்னல்கள் இல்லாத அறைகள் அல்லது பெரிய அலமாரிக்குள் இருத்தல் மிகவும் பாதுகாப்பானது.

மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தால் பாட்டரி உள்ள விளக்குகளை பயன்படுத்தலாம். மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தவதைத் தவிர்த்தல் நலம்.

வானிலை அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருதல் நல்லது.

சூறாவளிக்குப்பின் வெளியில் தேங்கிக் கிடக்கும் நீரில் நடப்பதை தவிர்ப்பதன் மூலம், துண்டிக்கப்பட்ட மின் கம்பிகளினால் உருவாகும் பயங்கர ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.

நடந்தோ/வாகனங்களிலோ செல்லும் போது முறிந்து கிடக்கும் விளம்பரப்பலகைகள், மரங்கள், மின்கம்பங்கள், உலோகத்தாலான சாலைத் தடுப்புக்களைக் கவனமாக கடந்து செல்லுதல் அவசியம்.

அபாய எச்சரிக்கை நிறுத்தப்படும் வரை அருகிலுள்ள கடற்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

10. வெள்ளத்திற்கு முன்

வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து விலைமதிப்புள்ள பொருட்களை அப்புறப்படுத்துதல்.

காஸ் சிலிண்டர், மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்தல்.

டார்ச் லைட்டை உபயோகிக்கவும்.

11. வெள்ளம் எற்படும்பொழுது

தாழ்வான இடங்களைக் காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுதல்.

வெள்ளநீர் வடியும் வரை அப்பகுதிகளுக்கு செல்லுவதைத் தவிர்த்தல்.

பாம்பு போன்ற விஷ ஜந்துகளால் பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக இருத்தல்.

12. வெள்ளம் வடிந்த பின்

வெள்ள நீரில் நடத்தல், நீந்துதல் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்த்தல்.

பாதுகாப்பான உணவு மற்றும் நீரை உட்கொள்ளுதல்.

குடிநீரை கொதிக்க வைத்து, வடிகட்டி பருகுதல்.

தரை, சுவர் அனைத்தும் நன்கு உலரும் வரை மின்சாரம் பயன்படுத்தாமல் இருத்தல் மின் கசிவினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும்.

வாயு கசிவு ஏதும் உள்ளதா என பரிசோதித்தல்.

தீ பற்றும் வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதித்தல்.

தரை, கதவு, ஜன்னல் மற்றும் சுவரில் ஏதும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிதல்.

13. காட்டுத்தீ ஏற்படும் முன்

தீயிலிருந்து தப்பிக்கும் வழிகள் மற்றும் முதலுதவி செய்யும் முறைகளைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

14. தீ பரவும் சமயம்

குடியிருப்புக்களைக் காலி செய்யும் பட்சத்தில் காஸ் சிலிண்டர்கள் மற்றும் மின் இணைப்புகளைத் துண்டித்துவிட வேண்டும்.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்க்களை வீட்டின் மையப் பகுதியில் குவித்து வைக்க வேண்டும்.

வெளியேறுவதற்கு தகுந்த கால அவகாசம் இருப்பின் தோட்டம் மற்றும் தொட்டிச் செடிகளுக்கு நீருற்றுதல் மூலம் பெரிய அளவிலான பாதிப்புக்களைத் தவிர்க்கலாம்.

தீ அணைந்த பின்

வானொலி, தொலைக்காட்சி அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்தல்.

எரிந்த மின்கம்பங்கள் மற்றும் மரங்கள், கட்டைகள் போன்றவற்றை கவனித்து செல்லுதல்.

வீட்டில் முழுமையாக புகை மற்றும் தீப்பொறி இல்லை என்பதை உறுதி செய்த பின் உட்செல்லுதல்.

ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்