ஆற்றலில் புதுப்பிக்ககூடியது மற்றும் புதுப்பிக்கவியலாது என இருவகைப்படும். ஆற்றல் ஆதாரங்கள் மற்றும் பயன்பாட்டை வைத்து வர்த்தக ரீதியான மற்றும் வர்த்தக ரீதியல்லாத என இருகூறாக பிரிக்கலாம். வர்த்தக ரீதியல்லாத - விறகு , விவாசாயக் கழிவு , சாணம், மற்றும் சாண எரிவாயு மற்றும் சூறிய ஆற்றல் போன்றவை மண்ணென்ணெய், நிலக்கரி, திரவ பெட்ரோலிய வாயு, மின்சாரம் போன்றவை வர்த்தக ரீதியானவை. ஆற்றல் பயன்பாடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலில் பாதிபாகம் சமையலுக்கென்றே செலவிடப்படுகிறது. இந்திய பெருளாதாரத்தில் பெரும் பகுதி ஆற்றல் தேவைக்கென்று செலவிடப்படுகிறது. மின் ஆற்றல் உற்பத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது. 1947 இல் மொத்த மின் உற்பத்தி 1.362 மெகா வாட்டிலிருந்து 2006 இல் 1,23,668 மெகா வா உயர்ந்துள்ளது. இந்தியாவின் 606 கிலோ வாட் மின்சாரம் ஒரு மணிநேரத்திற்கு தனிநபர் பயன்படுத்துவதாக கணக்கெடுப்பு கூறுகிறது. இது உலக சராசரி பயன்பாட்டை ஒப்பிடுகயில் 2,499 கிலோ வாட் ஆகும். சாண எரிவாயு உலக முதன்மை ஆற்றலில் 15-50% சாண எரிவாயுவிலிருந்து எடுக்க முடியும் என்று மதீப்பீடுகள் காட்டுகின்றன. சுமார் 70% வீட்டுற்கான ஆற்றல் நகர்வு சாண எரிவாயுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்திய சாண எரிவாயு உற்பத்தி ஆண்டிற்கு சுமார் 500 மில்லியன் டன்கள், விவசாய மற்றும் பிற தொடர்புடைய பகுதியில் எடுக்கப்படுகிறது. சூரிய ஆற்றல் சூரிய ஆற்றல் ஒரு நிலையான குறையாத ஆற்றல் இது இந்தியாவில் குறைந்துள்ளது, இந்தியாவில் சராசரியாக 200 மெகா வாட் சதுர கிலோ மீட்டர் அளவு சூரிய ஆற்றல் கி¬க்கிறது. ஒரு நாளைக்கு "சூரிய சேகரிப்பான்" சேகரிக்கும் 1 மீட்டர் சதுர ஆற்றல் தோராயமாக 1 கிலோ நிலக்கரி, 1/2 லிட்டர் மண்ணென்ணெய்க்கு சமமாகும். காற்று ஆற்றல் இந்தியாவின் மொத்த காற்று திறன் 45.000 மெகா வாட் ஆகும். காற்று ஆற்றல் கடலோர மாநிலங்களான மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திர பிரதேசம் , கேரளா, கோவா , கர்நாடகம், மகாராஷடா மற்றும் குஜராத்தில் அதிகமான அளவு கிடைக்கிறது. இயற்கை காற்று மற்றும் சூரிய ஒளி இலவசமாகவும் பூரணமாகவும் கிடைக்ககையில் இந்த ஆற்றலை நாம் பயன்படுத்தலாம். எரிவாயு மற்றும் மினசாரத்தால் உலர்த்துவதை குறைத்து பயன்படுத்தலாம். இயற்கை காற்றை சுவாசிக்க நம் வீட்டு ஜன்னல்களை திறந்து வைப்பதால் காற்று பதனாக்கம் பயன் பாட்டை குறைக்கலாம். ஆற்றலை சேமிக்கும் வழிகள் ஆற்றல் சேமிப்பு - மின் மற்றும் மின்னனு சாதனங்கள் மின்னனு சாதனங்கள் பயன்படுத்தும் போது அவற்றை அணைப்பது போன்ற எளிய ஆற்றல் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளலாம். தொலைக்காட்சி , கணினி மற்றும் பிற சாதனங்களை "காத்திருப்பு" முறையில் வைக்காமல் நிறுத்துவது நல்லது. பெரிய மின்விளக்குகள் சிறிய இரண்டு மின் - விளக்குகளை விட அதிக செயல்திறன் கொண்டது ஒளியுமிமும் இருமின்வாய். வழக்கமான பயன்படுத்தும் மின்விளக்கை விட சிதிலி மின் விளக்குகள் அரையுடன் குறைவாக கரிய அமில வாயுவை வெளியேற்றுகிறது. சாதாரண மின்விளக்குகளை விலை கூடுதலாக இருந்தாலும் அதிகளவு மின்சாரத்தை சேமிக்க முடியும். ஆற்றலை சேமிக்க சிறந்த வழி மிதிவண்டியை பயன்படுத்துவதே ஆகும். நாம் அன்றாடம் நடப்பதை வழக்கமாகிக் கொண்டால் உடல் அரோக்கியம் மற்றும் ஆற்றல் சேமிப்பிற்கு உதவும். பயன்படுத்தும் மின் சாதனங்களை தூசுபடியாமல் பராமரிக்க வேண்டும். அனைவரும் நட்சத்திர குறியீடு உள்ள மின்னனு சாதனங்களை பயன்படுத்தலாம். நீர் சூடேற்றும் கருவி நமது வீடுகளில் சூரிய சக்தியை கொண்டு நீரை சூடேற்றும் உணவு சமைக்கவும் பயன்கடுத்தலாம். குளித்தவுடன் நீர் சூடேற்றும் கருவியை அனைத்து விடவும். காற்றோட்டம் கோடை காலத்தில் ஜன்னல்கள் , திரைச்சாலைகள் மற்றும் கதவுகளை அதிகாலையில் திறப்பதால் வீடு குளிர்ச்சி அடையும். அடுப்பு உபயோகித்தபின் அடுப்புகளை உடனடியாக அணைக்கவும் அமுத்த அடுகலன் பயன்படுத்துதல் சிறந்தது. சமையல் செய்யவதற்கு முன் தேவையான பொருட்களை எடுத்து வைத்தும் , நன்கு திட்டமிட வேண்டும். சமைக்கும் போது பாத்திரத்தை தட்டுகொண்டு முடவும். சிறிய, குறுகிய வாயுடைய பாத்திரங்களை பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டி தேவையற்ற நேரங்களில் உபயோகித்தல் கூடாது. குளிர்சாதனப் பெட்டியில் கதவை தேவையற்ற நேரங்களில் திறத்தல் கூடாது. குளிர்சாதனப் பெட்டியின் குளிர்ச்சி 5 டிகிரி தேவையயை விட அதிகமாக இருப்பின், ஆற்றலின் பயன்பாடும் 25% அதிகரிக்கும்.உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் எரிவாயு கசிவு இருப்பின் அதை முதலில் சரி செய்யவும். வாகனங்கள் உங்கள் வாகனங்களின் எரிபொருள் சேமிக்க வேண்டுமானால் அதை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். எரிபொருள் வடிகட்டியை சுத்தம் செய்வதால் எரிபொருளை சேமிக்க வேண்டும். நீங்கள் வாகனங்களை மெதுவாகவும் , படிப்படியாக துரிதப்படுத்துவதன் முலம் 15% வாகனத்திறனை கூட்டலாம். 40-50 கிலோ மீட்டர் ஓட்டினால் வாகனத்திறன் 40% அதிகரிக்கும். வாகனங்களை பகிர்ந்து கொள்ளுவதின் முலம் ஆற்றலை சேமிக்கலாம். கூடுமானவரையில் பொது வாகனங்களை பேருந்து மற்றும் ரயில் வண்டியை பயன்படுத்தலாம். இதனால் துய்மைக் கேட்டினையும் ,சாலை நெரிசலையும் பெருமளவு குறைக்கலாம். ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்