கடந்த 40 ஆண்டுகளாக உலகில் மீன்பிடித்தளங்கள் அதிகரித்து வருவதால் மீன் உற்பத்தி குறைந்து வருகின்றது. உலகில் உள்ள 17 மீன் பண்ணைகளில் 15 பண்ணைகள் அழிந்து வருகின்றன. உலகில் உள்ள 72% கடல் மீன்கள் பிடிக்கப்படுவதால் அவை அழியும் நிலையில் உள்ளன. மாமிச உணவு உண்ணுவதால் ஏற்படும் விளைவுகள் வேளாண்மை துறைகளிலேயே விலங்கினப் பெருக்கம் தான் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. வருமான உயர்வு , மக்கட்தொகை மற்றும் மேற்கத்திய உணவு பழக்கம் ஆகியவற்றால், 1950ல் இருந்து மாமிசம் உட்கொள்ளுவது 500% அதிகரித்துள்ளது. தற்போது இந்தத் துறை 130 கோடி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து , 40% வேளாண்மை உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இருப்பினும் இது சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதிக்கிறது, தண்ணீர்.........? உலகில் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இருக்கின்றனர். ஒரு கிலோகிராம் கோழி மாமிசம் உருவாக 3900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ கிராம் தானியத்தை உற்பத்தி செய்ய 900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. புவி வெப்பமடைதல் அசைபோடும் மிருங்கள் தாங்கள் உண்ணும் உணவை செரிக்கும் போது மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன். உலகளவில் கிட்டதட்ட 37% மீத்தேன் வாயுவை கால்நடைகள் வெளியிடுகின்றன. (இந்த வாயுவை கார்பை-டை-ஆக்ஸைடை விட 23 மடங்கு, புவி வெப்பமயமாதலுக்கு அபாயம் விளைவிக்கக்கூடியது). மரங்களை நாம் அழிக்கின்றோம் ஒரு நொடிப் பொழுதில் ஒரு ஏக்கர் நிலப்பரப்புடைய மழைக்காடுகள் தீயல் எரிந்தோ அல்லது வெட்டப்பட்டோ அழிக்கப்படுகின்றன. கால்நடை பெருக்கம், மழைக்காடுகள் அழிவதற்கு மிக முக்கிய காரணமாகும். 2004ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் அமேசான் மழைக்காடுகள், சேயா பண்ணையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சோயாவை அறுவடை செய்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பண்ணை விலங்குகளுக்கு உணவாக அனுப்படுகிறது. உலக மக்களின் உணவு தட்டுப்பாடு உலகில் உள்ள 84 கோடி மக்கள் குறைந்த ஊட்டச்சத்துடன் இருக்கின்றனர். உலகில் உள்ள கால்நடைகள் 870 கோடி மக்களுக்கு தேவையான கலோரிக்கு சமமான உணவை உட்கொள்கின்றன. சராசரியாக 1 கிலோகிராம் விலங்கு மாமிசம் உற்பத்தி செய்ய 10 கிலோகிராம் தானியம் தேவைப்படுகின்றது. ஆதாரம்: சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம்