திடக்கழிவு திடக்கழிவு என்பது, மனிதர்கள் மற்றும் விலங்குகளினால் உண்டாக்கப்படும் தேவையற்ற திடப் பொருட்களாகும். திடக்கழிவு உற்பத்தி என்பது புதிதான ஒன்றல்ல. இது தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையிலேயே இருந்த நிகழ்வாகும். தொழில் புரட்சிக்கு முன்னால் இயற்கையிலேயே மக்கும் தன்மையுடைய வீட்டுக்கழிவுகளும், விவசாயக் கழிவுகளும் மட்டுமே இருந்தன. மக்கள் தொகை குறைந்தும், கட்டாந்தரைகள் மிகுந்தும் இருந்ததால் திடக்கழிவுகளை எளிமையாக அகற்ற நகர்புற திறந்தவெளிகளிலும் பூமியில் ஆங்காங்கே குழி தோண்டி கொட்டவும் அக்காலத்தில் முடிந்தது. ஏனெனில் அவை இயற்கையிலேயே மக்கக்கூடிய தன்மையை உடையதுதான். தொடர்ந்து முறையற்ற வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளினால், மண்ணில் திட கழிவுகளின் அளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மண்ணின் இயற்கைத் தன்மையும் மாற்றப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து கிராமத்தில் வீட்டுக்கழிவு மற்றும் விவசாய கழிவுகளும், நகரத்தில், தொழில் உற்பத்தி பொருட்களும், விஷதன்மை மற்றும் அபாயகர கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இக்கழிவுகள் மறுபயன்பாடு செய்யப்பட்டு மாற்று பொருள் உற்பத்திக்கு அடித்தளமாகிறது. திடக்கழிவு மேலாண்மையைப் பராமரிக்க, சமுதாயத்தில் மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கழிவுப் பொருட்களை மறுபயன்பாடு செய்வதோ அல்லது மறுசுழற்சி செய்வதோ நல்லது. திடக்கழிவு உற்பத்தியைப் பராமரிக்க, கழிவுகள் உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல், சேகரித்தல், சேமித்தல், ஒரே இடத்திற்கு மாற்றம் செய்தல், பதப்படுத்துதல், வெளியேற்றுதல் போன்றவற்றை முறைப்படி மேலாண்மைசெய்து, மக்கள் நலம், பொருளாதாரம், தொழில்நுட்பம், ஆகியவற்றோடு ரசிக்கத்தக்க அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைய வழிவகை செய்தல் வேண்டும். பொதுவாக திடக்கழிவுகள் இறுதியாகக் குவிக்கப்படும் இடங்கள் நீர்நிலைகளில் கொட்டுதல் நிலத்தில் கொட்டுதல் மண்ணுடன் கலந்து உழுதல் சாம்பலாக்குதல் கழிவு உற்பத்தி உற்பத்தியாகும் கழிவுகளில் உள்ள பொருட்களை அடையாளம் கண்டு நீண்ட நாட்கள் இருக்கும் தன்மையற்றவைகளை வெளியே எரிவதோ அல்லது சேகரித்தோ வைக்க வேண்டும். உதாரணமாக மிட்டாய்களை பயன்படுத்தும் வரை மேல் உறைக்கு ஒரு மதிப்பு உண்டு. பயன்பாட்டிற்குப் பின்னர் தூக்கி எறியப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கழிவும் வெவ்வேறு வகையில் வெளியேற்றப்படுகிறது. கழிவுகளின் உற்பத்தி பருவ கால நிலைகளைப் பொருத்தும், உணவுப் பழக்கவழக்கங்கள், வியாபார நடவடிக்கைகள் போன்றவைகளைப் பொருத்தும் அவைகளின் அளவுகளும் தன்மைகளும் மாறுபடும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2000 ஆண்டில் செய்த ஆய்வுகளின்படி முதல்நிலை நகரங்களில் சாராசரியாக 0.4 கி.கி. 1 நாளைக்கு 1 நபர் மூலம் கழிவு உற்பத்தியாக்கப்படுகிறது. மற்ற நகரங்களில் 0.2 கி.கி. அளவு உள்ளது. நகரமயமாவதலினால் கழிவுகளின் அளவு அதிகமாக உற்பத்தியாக்கப்படுகிறது. இந்திய நகர மக்கள் தொகை தற்போதுள்ள 25 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக 2025ல் அதிகரிக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 1 நாளைக்கு ஏறக்குறைய 1,00,000 மெட்ரிக் டன் நகர திடக்கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. திடக்கழிவு என்றால் என்ன? மனிதனால் உண்டாக்கப்படும் தேவையற்ற திடப் பொருட்களே திடக்கழிவுகள் எனப் படுகின்றன. இந்தியாவில் உண்டாகும் குப்பைகள் அளவு கி.பி. 2000 மற்றும் 2025க்கும் இடையே ஏற்படும் மாற்றங்கள் கீழ்க்கண்டவாறு கணிக்கப்பட்டுள்ளது. கழிவு கி.பி.2000 கி.பி.2025 கரிம கழிவு 40% 60% பிளாஸ்டிக்(ஞெகிழி) 4% 6% உலோகம் 1% 4% கண்ணாடி 2% 3% காகிதம் 5% 15% மற்றவை (சாம்பல் மணல், கல்துகள்கள்) 47% 12% திரவ கழிவு என்றால் என்ன? திட மற்றும் வாயு கழிவிற்கு இடைப்பட்ட, திரவ நிலையில் உள்ள கழிவுகளே திரவக் கழிவுகள் ஆகும். திரவ கழிவு உற்பத்தி எந்த ஒரு இயற்கை பொருளையும் பிரித்து வகைப்படுத்தி கையாளும் பொழுது பொருட்களின் உற்பத்திக்கு ஏற்ப கழிவுகள் திரவ நிலையில் வெளியேற்றப் படுகின்றன. உதாரணமாக வீட்டுக் கழிவு, தொழிற் கழிவு மற்றும் எண்ணெய்க் கழிவு தடை செய்யப்பட்ட திரவ கழிவுகள் கீழ்க்கண்ட திரவ கழிவுகள் எந்த வகை நிலங்களிலும் கொட்டக் கூடாது. கதிரியக்க கழிவுகள் ஈயப்புளிம மின்கல கழிவு (லெட் ஆசிட் பேட்டரி) பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கழிவு வெடிமருந்து, எரியும் தன்மையுடைய கழிவு, பிராணவாயு குறைந்த அல்லது அரிப்புத்தன்மையுடைய பொருட்கள் ஆதாரம்: சி.பி. ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்