அறிமுகம்

மருத்துவ கழிவுகளை கையாளுபவர்கள் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டியது மிக அவசியம்.

கவசங்கள்

கையுரை

தடிமனான ரப்பரால் செய்யப்பட்ட கையுறைகள் கழிவுகளை கையாளும் போது பயன்படுத்த வேண்டும். இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். கழிவுகளை கையாண்ட பிறகு கையுரைகளை இரண்டு முறை கழுவ வேண்டும். இந்த கையுரையை ஒவ்வொரு பயன்பாட்டிற்க பிறகும் கிருமிநாசினி சோப்பால் கழுவ வேண்டும். கையுரையின் அளவு பயன்படுத்துபவர்க்கு பொருந்துமாறு இருக்க வேண்டும்.

மேலங்கி பிற உடைகள்

தோலை பாதுகாக்க, துணிகள் மாசுபடாமல் இருக்க இந்த உடைகள் அணியப்படுகின்றன. இவை துணி அல்லது ஊடுருவும் தன்மையற்ற பொருட்கள் அதாவது பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆனதாக இருக்க வேண்டும். தன்வெப்பக்கலன்களில் வேலை செய்பவர்கள் அணியும் மேலங்கி தீப்பிடிக்காத பொருளால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

முகமூடி

முகமூடி, கண்ணாடி போன்றவை முகத்தை வெப்பம் மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க அணியப்படுகிறது. இவை மூக்கு மற்றும் வாயை மூடும் படியாகவும் தூசி, நச்சுக்காற்றை வடிகட்டும் தன்மையுடையதாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

காலுரைகள்

காலுரை அதிக அளவு நோய் தொற்றிய அல்லது தொற்றும் தன்மையுடைய கழிவுகளை கையாளும்போது கால் தோலிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன. காலுரைகள் வழுக்கும் தன்மையற்றதாக இருக்க வேண்டும்.

சுத்தம் செய்யும் கருவி

துடைப்பம்

துடைப்பம் குறைந்தபட்சம் 1.2 மீ நீளம் உடையதாக இருக்க வேண்டும். துடைப்பத்தின் பருமன் கையாள ஏதுவாக இருக்க வேண்டும். தரையின் வகையை பொருத்து பயன்படுத்தும் துடப்பத்தின் பெருக்கும் பகுதி கடினமாகவோ அல்லது மென்மைகயாகவோ இருத்தல் வேண்டும்.

தூசி வாரிகள் பெருக்கும் பொழுது சேரும் குப்பைகளையும் தூசிகளையும் சேகரிப்தற்க்கு இது பயன்படுகின்றது. இவை பிளாஸ்டிக்களாலோ அல்லது முலாம் பூசப்பட்ட உலோகத்தாலானதாகவோ இருக்கலாம். குப்பை சேகரிக்கும் பகுதி ஏற்ற இறக்கம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டும். இந்த அமைப்பு அதன் புறப்பகுதியில் தூசி ஒட்டாமல் இருக்க உதவுகின்றது. இவை பயன்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் கிருமி நாசினிகளால் சுத்தம் செய்து உலர வைக்கப்பட வேண்டும்.

துடைப்பான்

இவை நீண்ட கைபிடி உடையவை. தரையை துடைப்பதற்க்கு பயன்படுகிறது. துடைப்பான்கள் துணி அல்லது ரப்பர் வகையாக இருக்கலாம். துடைப்பான்கள் தேய்வது மற்றும் கிழிவதை பொறுத்து மாற்றிக்கொள்ளலாம். இயந்திரதிருகு வகை துடைப்பான்கள் நீரை உறிஞ்சி பிழிவதற்கு ஏதுவாக இருக்கிறது.

வெற்றகத் துப்புரவாக்கி

அறையின் அளவை பொருத்து வெற்றகத் துப்புரவாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.

சேகரிக்கும் கருவி

குப்பைத் தொட்டிகள்

ஒவ்வொரு இடத்திலும் சேரும் கழிவுகளின் அளவை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்றவாறு குப்பைத் தொட்டிகளின் கொள்ளளவு இருக்குமாறு அமைத்தல் வேண்டும். குப்பை சேகரிக்கும் நாட்களுக்கிடையே குப்பைத் தொட்டி நிரம்பி வழிவதாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகள் சேகரித்த பின்பு குப்பைத் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும்.

தற்காலிக கொட்டகை (அ) சேமிப்பு அறை

இந்த அறைகள் (அ) கொட்டகைகள் கழிவு சேகரிக்கப்படும் இடத்திலிருந்து தொலைவில் இருக்க வேண்டும். இவை குறிப்பாக வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதினால் மாசுபடுத்தும் பொருட்கள் காற்றில் அடித்துச் செல்லாதவாறு தடுக்கலாம்.

சுத்திகரிக்கப்படாத கழிவுகளை 48 மணி நேரத்திற்க்கு மேல் இந்த அறையில் வைக்க கூடாது. இவ்றைகள் எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்ட பொருட்களுள்ள இடங்களின் அருகில் இல்லாதவாறு அமைக்கப்பட வேண்டும். முள்கம்பி வேலி, அமைத்து விலங்குகள் மற்றும் பறவைகள் வராதவாறு பாதுகாக்க வேண்டும். பாதுகாவலர்களை வைத்து அனுமதியற்ற நபர்களை அப்பகுதியில் நுழையாதவாறு பார்த்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அனுமதியற்ற கழிவுப் பொருட்களின் மறுவிற்பனையை தடுக்கலாம்.

கையாளும் கருவி

தண்டவாள தள்ளுவண்டிகள்

நோய் தொற்றும் தன்மையுடைய கழிவுகளை உருவாகும் இடத்திலிருந்து நேரடியாக அகற்ற இவ்வண்டிகள் பயன்படுகின்றன.

தள்ளுவண்டி

இவை கழிவு உண்டாகும் இடத்திலிருந்து அவற்றை சேகரிக்கும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. நேரடியாக கழிவுகள் இதில் குவிக்கப்படாதவாறு பார்த்துகொள்ள வேண்டும். குப்பைத்தொட்டிகளிலிருந்து எடுக்கப்படும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் பாலிதீன் பைகளில் இடப்பட்ட பின்னரே இவ்வண்டிகளில் வைத்து எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு

மருத்துவக் கழிவுகள் ஐந்துவிதமான தொழில்நுட்பங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன.

இரசாயன சுத்திகரிப்பு : நோய் தொற்றாமல் இருப்பதற்காக இரசாயனங்களை பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுகிறது.

அனல் வழி சுத்திகரிப்பு : கழிவுகளை அழிப்பதற்கும் மாசகற்றுவதற்கும் வெப்ப ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.

குறைவு-அனல் முறை : (930சி - 1970சி) நீராவி, சுடுநீர், மின்காந்த கதிரியக்கம் மூலம் வெப்பமுண்டாக்கி, மாசகற்றி தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் முறையாகும்.

நீர் தன்வெப்பகலன்: நீராவி மூலம் மாசகற்றுதல்

தன்வெப்பக்கலன்

மருத்துவ கழிவுகளை பக்குவம் செய்யவும், கழிவுகளின் நோய் தொற்றும் தன்மையை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

ஈர்ப்புப்பாய்வு தன்வெப்பக்கலனை பயன்படுத்தும்போது மருத்துவ கழிவுகளை கீழ்கண்ட முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. வெப்பநிலை 1210சிக்கு குறைவாக இருக்க கூடாது மற்றும் ஒரு சதுர இன்ஞ்சிக்கு 15 பவுண்டு அழுத்தம் இருக்க வேண்டும். கழிவுகள் இக்கலன்களில் சுத்திகரிக்கப்படும் நேரம் 60 நிமிடத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

அல்லது வெற்றிட தன் வெப்பகலனை பயன்படுத்தும்பொழுது மருத்துவக் கழிவுகள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்கு வெற்றிடத்துடிப்பிற்க்கு உட்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தன்வெப்பகலனில் காற்ற நீக்கப்படுகிறது. கழிவுகள் கீழ்கண்ட முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது.

மருத்துவக்கழிவுகளை கையாளும்பொழுது எக்காரணம் கொண்டும் சுத்திகரிக்கும் கால அளவு, அழுத்தத்தையோ, வெப்பநிலையையோ குறிப்பிட்ட அளவிற்க்கு மேல் மாற்றக் கூடாது. மாற்றினால் மொத்த மருத்துவக்கழிவுகளை மீண்டும் சரியான கால, வெப்ப அழுத்த நிலைகளை பயன்படுத்தி சுத்திகரிப்புச் செய்ய வேண்டும்.

நீர் நுண்ணலை அடுகலன்: நுண்ணலை ஆற்றல் மூலம் உண்டான நீராவி மூலம் மாசகற்றுதல்

மிகுதி - அனல் முறை: (540 - 83000சி) அதிக வெப்பத்தை பிரயோகித்து மாசகற்றி, கழிவுகளை அழிக்கும் முறையாகும்.

நீர் வெப்பகலன்: நீராவி கொண்டு கழிவுகளை துண்டாக்கி காய வைத்தல்.

சாம்பலாக்குதல்: கழிவுகளை முழுவதுமாக எரிக்கும் தொழில்நுட்பமாகும்.

சாம்பலாக்கி

வெளிவரும் புகை அளவுக்குள் இருக்குமாறு சாம்பலாக்கிகளை வடிவமைக்க வேண்டும்.

சாம்பலாக்க வேண்டிய கழிவுகளை வேதி பொருட்கள் மூலம் பக்குவம் செய்யக்கூடாது. குறிப்பாக குளோரின் கொண்ட தொற்றுத்தடையன் பயன்படுத்த கூடாது.

கழிவுகள் சாம்பலாக்கப்பட்டபின் அவற்றிலுள்ள உலோகங்கள் தரநிர்ணய அளவுக்குள் இருக்க வேண்டும்.

டீசல் போன்ற குறைந்த சல்பர் கொண்ட எரிபொருட்களை சாம்பலாக்கியில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.

பொறிநுட்பமுறைகள் : கழிவுகளை கையாளுவதற்கு ஏற்றவாறு உரு சிதைக்கும் முறைகளாகும். இதில் கெட்டிப்படுத்துதல் மற்றும் சிறு துண்டாக்குதல் என இரு முக்கிய முறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஆதாரம்: சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்