வளாகத்தில் தண்ணீர் பற்றிப் புரிந்து கொள்ளுதல்

தண்ணீர் ஒட்டம், பயன்பாடு, தரம் ஆகியவற்றை இணைத்துப் பார்த்தல். குறிக்கோள் - வளாகத்தில் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது? இந்நீர் எங்கிருந்து கிடைக்கிறது? இது எங்கே சேமித்து வைக்கப்படுகின்றது? எங்கே எப்படி இந்நீர் பயன்படுத்தப்படுகிறது? கழிவுநீர் எப்படி வெளியேற்றப்படுகிறது? தண்ணீரின் தரம் யாது? மழைநீர் நம்பிக்கைத்ததரும் ஆதாரமாக உள்ளதா? இச்செயல் இவ்வினாக்களுக்கு எல்லாம் விடைகாண உதவுகிறது. மேலும் தண்ணீர்ச்சிக்கனம் கையாளத் தகுந்த இடங்களைக் கண்டறியவும் உதவுகிறது.

தொகுப்புப் பார்வை

விருப்புத் தேர்வுப் பணிகள்

4 செயல்களில் 2 ஐச் செய்து முடிக்கவும்.

பள்ளிக்கான மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பினை வடிவமைத்தல்

மழைமானியை உருவாக்குதல்

பள்ளிக்களுக்கிடையில் தண்ணீர்ப்பயன்பாட்டை ஒப்பிடுதல்

சூரியக்கதிர்வழித் தண்ணீர்த் தொற்று நீக்கத்தைப் பயன்படுத்தித் தண்ணீரை வடிகட்டுதல்

தண்ணீரை ஆராய்வதற்கான கூறுகள்

பள்ளி வளாகத்தில் பெரும்பாலும் காணப்படும் நீர் ஆதாரங்கள், சேமிப்புமுறைகள், பயன்பாடுகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றுமிடங்கள்/ அமைப்புகள் சில கீழே தரப்படுகின்றன.

தண்ணீர் ஓட்டம்

குறிக்கோள்

வளாகத்தில் உள்ள தண்ணீர் ஒட்டத்தைப் புரிந்து இடத்துக்கும் பயன்பாட்டிற்கும், வெளியேற்றத்துக்கும் எவ்வாறு செல்கிறது என்பதை அறிந்து கொள்ள வளாகத்தில் சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்று உணர உதவும்.

அறிவுரைகள்

தேச வரைபடம் போலப் பள்ளி வளாகத்தை அதன் கட்டடங்கள், விளையாட்டுத்திட்டங்கள், பாதைகள் உட்பட பிற அமைப்புகளுடன் வரையவும்.

தண்ணீர் வரும் ஆதாரம், சேமிப்பு, பயன்பாடு மற்றும் வெளியேற்ற இடங்களை வளாகப்படத்தில் குறியிடவும். இது வளாகத்தில் தண்ணீர் பயன்படுத்தப்படும் பல்வேறு இடங்களை கண்டறிய உதவும்.

தண்ணீர் வழங்கல், சேமிப்பு, பயன்பாடு, வெளியேற்றம் எனத் தண்ணீர் செல்லும் பல்வேறு நிலைகளை அடையாளப் படுத்தி இணைத்திடப் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தவும்.

கீழ்க்காணும் பணிகளுக்கு (துப்பரவு, பாதுகாப்பு, நிர்வாகம் போன்றவை) எந்த உதவியாளர் பொறுப்பு என்பதை அறியவும்.

நீர்வழங்கல் (தண்ணீர் இல்லையென்றால் உடனடியாகச் செயல்படுபவர்).

சேமிப்பு (நீர்த்தேக்கத் தொட்டியில் ஒழுக்கு ஏற்பட்டாலோ, தொட்டியைச் சுத்தப்படுத்த வேண்டியிருந்தாலோ, தொட்டியைச் சுத்தப்படுத்த பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்)

பயன்பாடு (தண்ணீர்க் குழாய் ஒழுக்கு, தண்ணீர்ப் பயன்பாட்டைக் கண்காணித்தல், பயன்பாட்டுக் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்பவர்).

கருவிப்பேழை

பள்ளியைப் படமாக வரையவும்

நீ வரைந்த பள்ளிப்பாடத்தில் மேலே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களைச் சேர்க்கவும் அல்லது குறியிடவும்.

தண்ணீர் ஓட்டத்தைக் குறிக்கும் வகையில் நீர் ஆதாரத்திலிருந்து சேமிப்பு, பயன்பாடு, வெளியேற்ற இடங்கள் எனக் கோடிட்டு இணைக்கவும்.

நீர் மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சி இடங்களிருப்பின் அவற்றைப் படத்தில் குறிப்பிடுவதை நினைவில் கொள்ளவும்.

சிந்தனை

பள்ளி வளாகத்தில் நீர் வழங்கல் அமைப்பு சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதா? நீர் ஒழுக்கிணைக் கண்டறிய வாய்ப்புள்ளதா? நீர் ஒழுக்கு ஏற்பட்டால் உடனடியாக நிறுத்த வாய்ப்புள்ளதா?

பள்ளிக்கு வெளியே ஏற்படும் நிகழ்ச்சிகள் பள்ளியின் உள்ளே நீர் ஓட்டத்தை எவ்வாறு பாதிக்கின்றன? ஏன்?

தற்போது பள்ளியில் உள்ள நீர் ஆதாரம் இன்னும் 10 ஆண்டுகள் கழிந்த பின்பும் நீர் வழங்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

படத்தில் காட்டப்பட்டுள்ள நீர் ஆதாரங்கள் எங்கிருந்து தண்ணீரைப் பெறுகின்றன.

தண்ணீர் பயன்பாடு

குறிக்கோள்

பள்ளி வளாகத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காகப் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவைக் கண்டறிவதன் மூலம் தண்ணீர் மொத்தப் பயன்பாட்டை அளவிடுதல்.

அறிவுரைகள்

செயல் அ-1 இல் உருவாக்கிய பள்ளி வரைபடத்தில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் பயன்படும் எல்லா இடங்களையும் குறிப்பிடவும்.

ஒவ்வோர் இடத்திலும் தண்ணீரின் வெவ்வேறு பயன்பாடுகளைக் குறியிட்டுப்படம் மூலம் குறிப்பிடவும். செயல் அ-1ல் உள்ள தண்ணீரை ஆராய்வதற்கான கூறுகள் வரைபடத்தைப் பார்க்கவும்.

அடுத்த பக்கத்தில் உள்ள அறிவுரைகளில் தகுந்தவற்றைப் பயன்படுத்தி வெவ்வேறு செயல்களுக்குப் பயன்படும் தண்ணீரின் அளவை மதிப்பிடவும்.

தண்ணீர்ப் பயன்பாட்டுப் பட்டியல் / மானி அளவீடுகள் / ஆழ்துளை கிணறு இறைவை எந்திரப்பயன்பாட்டுப் பட்டியல் ஆகியவற்றை அலுவலகத்தில் பெற்று ஒரு மாதத்துக்கு எத்தனை ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியவும். நீங்கள் மதிப்பிட்ட தண்ணீர்ப் பயன்பாட்டு அளவு சரிதானா என்பதை அறிந்து கொள்ள இது உதவும்.

திரட்டிய தகவல்கள் மற்றும் பட்டியலோடு சரிபார்த்ததன் அடிப்படையில் தனிநபரின் பயன்பாட்டைக் கணக்கிடவும். (பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பிற பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர் அனைவரையும் சேர்த்துக் கணக்கிடவும். இத்தனிநபர்த் தரவினை வேறுவகைச் செயல்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தண்ணீர் பயன்பாட்டை அளவிடும் உத்திகள்

குவளைகள் பெரும்பாலும் 1-2 லிட்டர் அளவுடையவை

500 மிலி - 600 மிலி பாட்டில் அல்லது மூக்கக்குவளையினால் எத்தனை முறை ஊற்றினால் நிரம்புகிறது என்பதைக் கொண்டு குவளையின் கொள்ளவைக் கணக்கிடலாம்

எடுத்துக்காட்டு : கழிப்பறையில் உள்ள குவளையை 600 மி.லி பாட்டிலில் 1 1/2 பாட்டில் அளவு உள்ள நீர் கொண்டு முழுமையாக நிரப்ப முடியும். அதாவது ஒவ்வொரு முறை குவளை நிரம்பும்போது 900 மி.லி நீரை அக்குவளை பிடிக்கிறது. கழிப்பறையில் கழுவுவது போன்ற துப்பரவுப் பணிக்கு ஒருவர் எவ்வளவு நீரைப் பயன்படுத்துகிறார் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

சராசரியாக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் குவளையின் எண்ணிக்கை (கேட்டுச் சராசரியாகக் கண்க்கிடவும்), பயன்படுத்துவோர் எண்ணிக்கை, குவளையின் கொள்ளளவு, அதாவது ஒருவருக்கும் 2 குவளைகள் 200 பயன்படுத்துவோர் 900 மி.லி = 360 லிட்டர்.

வாளிகள் ஒரு லிட்டர் குவளையினால் எத்தனை முறை ஊற்றினால் வாளி நிரம்புகிறது என்பதைக் கணக்கிடவும், இதன் மூலம் வாளியின் கொள்ளவை எளிதில் கணக்கிடலாம்.

தரையைத் துப்பரவு செய்ய வாளிகள் பயன்படுத்தபடுகின்றன. நீர்ப்பயன்பாட்டைக் கண்டறிய, வாளியின் கொள்ளளவு (வாளி நிரம்ப எத்தனைக் குவளை நீர் தேவைப்படுகின்றது), தரையைத் துப்பரவு செய்யும் போது பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் வாளியில் எந்த அளவுக்கு தண்ணீர் பிடிக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் எத்தனை முறை வாளியை நிரப்புகிறார்கள் என்று ஒரு நாள் முழுவதும் அவர்களைக் கண்காணித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நீர் நிரப்பப்படும் வாளியின் கொள்ளளவு + ஒரு நாள் முழுவதும் வாளி பயன்படுத்தப்படும் முறை (20 லிட்டர் வாளியில் பாதி அளவு என்றால் 10 லிட்டர்) + ஒரு நாளைக்கு 200 முறை (தரைதுடைக்கும் எல்லாப் பணியாளர்களையும் சேர்த்து) = 2000 லிட்டர், ஒரு நாள் தரைக் துடைக்க செலவாகும் நீர்.

2. தண்ணீர் பயன்பாடு

ஒரு குவளை முழுவதும் நீர் நிரம்ப ஆகும் காலத்தை நொடிகளில் கணக்கிடவும்.

இந்த எண்ணால் 60 ஐ வகுக்கவும் (ஒரு நிமிடத்தில் உள்ள நொடிகளை ஒரு குவளை நிரம்ப எடுத்துக்கொள்ளும், நொடிகளால் வகுத்தால் ஒரு நிமிடத்தில் எத்தனைக் குவளைகளை நிரப்ப முடியும் என்பதை அறியலாம். இப்போது தண்ணீர்க் குழாயின் வழி ஒடும் நீர் ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு அதாவது ஒவ்வொரு நிமிடமும் அக்குழாயின் வழியாக எத்தனை லிட்டர் தண்ணீர் செல்கிறது என்பதை அறிய முடியும். எத்தனை நிமிடங்கள் அத்தண்ணீர்க்குழாய் பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் கணக்கிட்டுப் பெருக்கினால் ஒரு நாளின் தண்ணீர் பயன்பாட்டை அறியலாம்.

எடுத்துக்காட்டு

கைகழுவும் பகுதியிலுள்ள குழாயின் நீர் ஓட்டத்தைக் கணக்கிடல் -

குழாயை முழுமையாகத் திறந்து விடவும். 10 நொடிகளில் ஒரு லிட்டர் குவளை/ நிரம்புகிறது. அதாவது நீரின் ஒட்டம் 60/10 = ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டர். சராசரியாக மாணவர்கள் ஒருநாளைக்கு 4 முறை கைகழுவுகிறார்கள். 200 மாணவர்கள் அல்லது எல்லா மாணவர்களும் கைகழுவ எடுத்துக்கொள்ளும் மொத்த நேரம் 133x33 நிமிடங்கள் (200x4=800 முறை / 6 நிமிடங்கள்) பயன்படுத்தப்படும்

நீரின் அளவு =133.33 = 6 லிட்டர் =800 லிட்டர்

ஒருநாளைக்கு எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியக் கழிப்பறையின் வெளியே சுவரொட்டி ஒன்றை ஒட்டி மாணவர்கள் ஒவ்வொரு முறை அதைப்பயன்படுத்தும்போது குறியிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டு

ஒவ்வொரு நீர்ப்பீய்ச்சுத் தொட்டியும் ஒரு லிட்டர் குவளையினால் 12 பிடிக்கிறது அதாவது 12 லிட்டர் தண்ணீர் பிடிக்கிறது, 200 மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்தப்படும் நீரின் அளவு 200 மாணவர்கள் x 2 முறை X 12 லிட்டர் = ஒருநாளைக்கு 4800 லிட்டர்.

நீர் ஒழுக்கு, நீர் ஒழுக்கம் நீர் மானியினால் தண்ணீர்ப் பயன்பாடு என்றே பதிவு செய்யப்படும் பல்வேறு இடங்களில் குவளைகளைக் கொண்டு எவ்வளவு நீர் ஒழுக்கு மூலம் வீணாகிறது எனக் கண்டறியவும்

எடுத்துக்காட்டு

ஒழுகின்ற தண்ணீர்க்குழாய் ஒரு லிட்டர் குவளையை 10 நொடிகளில் நிரப்புகிறது, ஒரு நிமிடத்திக்கு 6 லிட்டர் குழாயை அடைக்கும் திருகி இல்லாததால் 24 மணிநேரமும் ஒழுகிறது. அதாவது பள்ளிக்குத் தண்ணீர் இழப்பு ஏற்படுகிறது.

ஒரு நிமிடத்துக்கு 6 லிட்டர் x ஒரு மணிக்கு 60 நிமிடங்கள் x (24 மணி நேரம்) ஒரு நாளைக்கு 864 லிட்டர்.

கருவிப்பேழை

ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தண்ணீர் அளவைக் கண்டறியவும்.

அ. நீர்மானி அல்லது பயன்பாட்டுப் பட்டியல் அல்லது நீர் இறைவை எந்திரப்பயன்பாட்டுப் பதிவு கொண்டு வளாகத்தில் பயன்படுத்தப்படும் மொத்த நீரின் அளவைக் கணக்கிடுதல்.

ஆ. வளாகத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை

இ. ஒவ்வொரு நபருக்குமான தண்ணீர் பயன்பாடு = அ/ஆ லிட்டர்

முன்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தண்ணீர்ப் பயன்பாட்டை அளவிடும் உத்தியைக் கையாண்டு, பள்ளிவளாகத்தில் ஒவ்வோர் இடத்திலும் உண்மையாக எவ்வளவு தண்ணீர் செலவாகிறது எனக் கண்டறியவும். ஒவ்வொரு மட்டத்திலும் கிடைக்கும் தரவுகளைக் காட்டி மொத்தக் தண்ணீர்ப் பயன்பாட்டைக் கணக்கிடவும்.

தண்ணீர் தரம்

எல்லா தண்ணீரும் பயன்படுத்தத் தக்கதன்ற தரத்தின் அடிப்படையில் வெவ்வேறு செயல்களுக்குத் தண்ணீரைப் பயன்படுத்த முடியும். தண்ணீரின் தரத்தைப்பற்றிப் புரிந்து கொள்ள இந்தப் பகுதி உதவும். எடுத்துக்காட்டாக கலங்கிய அல்லது சேற்று நீரை வடிக்கட்டாமல் அருந்துவது உடல்நலத்துக்குக் கேடாகும். ஏனெனில் அந்நீரில் சேறும், பாக்டீரியாவும் இருக்கும். சுத்தப்படுத்தப் பயன்படுத்தினாலும் கறைகளை ஏற்படுத்தும். சில வேளைகளில் குடிநீரும் கூட நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களில் இருந்து நோயை உண்டாக்கும்.

உங்கள் பள்ளி பயன்படுத்தும் தண்ணீரின் தரம் யாது? உங்கள் வீட்டில் என்ன தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்? தண்ணீரின் தரத்தின் ஆய்வு முடிவுகளை நீங்கள் காட்டும் போது மற்றவர்கள் எப்படி எதிர்வினை புரிகிறார்கள்?

அறிவுரைகள்

தண்ணீர் பயன்படுத்தப்படும் 5 இடங்களிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்கவும். பல நீர் ஆதாரங்களிருப்பின் ஒவ்வொன்றிலிருந்து மாதிரி எடுக்கவும். மழைநீரை ஒரு மாதிரியாகக் கொள்ளவும். தண்ணீரின் கடினத்தன்மை, ஃபுளோரைடு பாக்டீரியா, படிந்துள்ள குளோரைடு, ஆகியவற்றைக் கண்டறிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பின்னர் கீழ்காணும் அறிவுரைகளைப் பின்பற்றவும்.

நிறம் காணுதல். ஒவ்வொரு மாதிரியையும் கூர்ந்து கவனித்து அதன் நிறத்தைப் பதிவுசெய்யவும்.

கலங்கலைக்காணுதல் - தண்ணீர் தெளிவாக உள்ளதா சேறுகலங்கி உள்ளதா? எனக் கூர்ந்து நோக்கவும். கீழ்க்காணும் படங்களை ஒப்புநோக்கப் பயன்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொரு மாதிரிக்குமான உங்கள் கண்டுபிடிப்பை பதிவு செய்யவும்.

மணம் நுகர்தல் - உங்கள் மாதிரியை நுகரவும். மணமின்றி இருக்கலாம். கெட்ட நாற்றத்துடன் இருக்கலாம். 5 மாதிரிகளுக்கும் அதன் தன்மையையறிந்து பதிவு செய்யவும்.

கரைந்துள்ள திடப்பொருளைக் கண்டறிய சூரிய ஒளிக்கு எதிரே அல்லது வேறு ஒளியின் எதிரே தண்ணீர் மாதிரிகளைப் பிடித்துப் பார்க்கவும். மிதக்கும் அல்லது கரைந்த பொருள்கள் தென்பட்டால் ஒவ்வொரு மாதிரிக்கும் பதிவு செய்யவும்.

சிந்தனை

உங்களின் கண்டுபிடிப்புகளின் படி உங்கள் பள்ளி நீர் குடிக்கத் தகுந்ததா? மற்றவற்றுக்குப் பயன்படும் தண்ணீரும் தகுதியானதா?

பல்வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தண்ணீர்க்கு இடையில் தரவேறுபாட்டைக் கண்டீர்களா? இவற்றுக்கு இடையில் எந்த அளவு கோலில் தரம் வேறுபடுகிறது? இவ்வேறுபாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய முடிகிறதா?

பள்ளியிலுள்ள தண்ணீரின் தரத்தில் நீங்கள் கண்டறிந்த உண்மைகளை உங்கள் மீதோ உங்கள் நண்பர்கள் மீதோ ஏற்பட்டுள்ள தாக்கங்களுடன் இணைத்துப் பார்க்க முடிகிறதா?

மழைநீர் சேகரிப்புத் திறம்

குறிக்கோள்

வளாகத்திலிருந்து பெறக்கூடிய மழைநீரின் அளவை மதிப்பிடல்.

அறிவுரைகள்

நன்னீரைச் சார்ந்திருக்கக் கூடிய நிலையிலிருந்து சில மாதங்களாவது விடுபட்டிருக்கமளவுக்கு ஒவ்வோராண்டும் மழைநீரைச் சேகரிக்கப்பெரிய அளவில் வாய்ப்பிருக்கிறது. மின்கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணத்தைக் குறைப்பதற்கு மழைநீர்ச் சேகரிப்பு உதவுகிறது, அல்லது நிலத்தடி நீரை அதிகப்படுத்தி ஒவ்வோராண்டும் நீண்ட காலத்துக்குக் கிணற்று நீரை எடுக்கப் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு 1

100 சதுர மீட்டர் கான்கீரீட் கூரையில் 30 மீட்டர் (0.03) மீட்டர் மழைபொழிவு ஏற்படுகிறது. இக்கூரைத் தளத்திலிருந்து பெறக்கூடிய மழைநீரின் அளவு

= கூரைத்தளத்தின் பரப்பு (100 சதுர மீட்டர்) * மழைப்பொழிவின் அளவு (.03 மீட்டர்) கான்கீரிட் கூரையில் வழிந்தோடும் நீரின் அளவு (0.9) = 2.7 ஆயிரம் லிட்டர் அல்லது 2.7 கனமீட்டர் அல்லது 2700 லிட்டர்

எடுத்துக்காட்டு 2

பேரவை நடைபாதைப் பரப்பான 100 சதுர மீட்டர் பகுதியில்:

30 மி.மீ மழைபொழகிறது. இதிலிருந்து பெறக்கூடிய மழைநீரின் அளவு = பாதைப்பரப்பு (100 சதுர மீட்டர்) * மழைப்பொழிவு (0.03 மீட்டர்) + வழிந்தோடு நீரின் அளவு (0.5) = 1.5 ஆயிரம் லிட்டர் அல்லது 1.5 கனமீட்டர் அல்லது 1500 லிட்டர்.

கருவிப்பேழை

பள்ளி வளாகத்தின் மொத்தப்பரப்பளவு - சதுர மீட்டர்

கீழே உள்ள அட்டவணையை நிரப்பத் தேவையான தகவல்களைத் திரட்டவும்.

வளாகத்தில் மழைநீர்ச் சேகரிப்பு மேற்கொள்ளப்படுகிறதா? ஆம்/இல்லை

ஆம் எனில், வளாகத்தில் மழைநீர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடவும்.

சிந்தனை

மழைநீர் குடிக்கத் தகுந்ததா?

துப்புரவுத் தேவைகளுக்காக அல்லது தோட்டத் தேவைகளுக்காக மட்டும் எத்தனை நாள்களுக்கு இந்நீரைப் பள்ளியில் பயன்படுத்த முடியும்?

உங்கள் பள்ளியில் மழைநீர்ச் சேகரிப்பு நடைபெறுகிறதா? இந்த அமைப்பு செயல்படும் நிலையில் உள்ளதா? ஆம் எனில் அது பயன்படுகிறதா? எவ்வாறு? இல்லையென்றால் செயல்படாததற்குச் காரணம் என்ன?

பள்ளிக்கு அருகிலுள்ள வீடுகளில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பு உள்ளதா? அவர்கள் ஏன் அதை அமைத்துள்ளனர்?

மழைநீர்ச் சேகரிப்புத் தொடர்பான கதைகள் அனைத்தையும் தொகுக்கவும். இதுவரை தொகுத்தகதைகளை நீங்கள் பழகும் நண்பர்களிடம் கூறி மதிப்பிடச் சொல்லவும்.

ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் மழைநீரைச் சேகரித்தால் ஆறுகள், ஏரிகள், ஒடைகள், வறண்டுபோகும் என நினைக்கிறீர்களா?

அறிந்தவற்றைத் தொகுத்தல்

குறிக்கோள்

* வளாகத்தில் தண்ணீரைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றையெல்லாம் தொகுத்து ஒர் அறிக்கை எழுதவும். உங்கள் வளாகத்தில் நீரின் ஒட்டம், எப்படி, எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது, அதன் தரம் போன்றவற்றை முன்பின் அறியாத ஒரு வாசகரும் புரிந்து கொள்ளும் வகையில் போதிய தகவல்களை இணைத்துச் சிறப்பாக எழுதவும்.

ஒன்றோடொன்று தொடர்புடைய பல சவால்களை நம் முன்னே நீடித்த வாழ்வு விடுத்துக் கொண்டுள்ளது. தண்ணீரைப் பொறுத்தமட்டிலும் கூடப் பிரச்சனைகள் அல்லது நீரின் ஆதாரங்கள், தரம், பயன்பாடு ஆகியவை ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இவை எவ்வாறு ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

இப்பயணத்தில் உங்களுக்கு உதவியாக இவ்வுள்ளிணைப்புகளைப் பற்றி மேலும் சிந்தித்துப் பார்த்திட சில வழிகாட்டு வினாக்கள் தரப்பட்டுள்ளன. நீங்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்த எந்தத் துணைவினாத் தொகுதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உங்களுக்கு முழு உரிமையுள்ளது. இத்திட்டத்தில் என்ன எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து நீங்கள் சொந்தமாக மேலும் சில வினாக்களையும் சேர்த்து விடையளிக்கலாம்.

அறிவுரைகள்

இந்த அறிக்கையில் நீங்கள் அளிக்க வேண்டிய பல்வேறு கூறுகளை இப்படம் காட்டுகிறது. இச் செயல் கட்டாயமானதாகும்.

இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்புப் பட்டியல் / தொகுப்புரைத்தாளில் திரட்டப்பட்ட தகவல்கள் சரியானவை என உங்கள் ஆசிரியரால் கையொப்பமிடப்படல் வேண்டும். இப்புத்தகத் தொடக்கத்தில் கூறப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் விருப்பத்துக்குரிய வடிவத்தில் குறைந்த அளவு 1500 சொற்களைக் கொண்டதாக இது வரை திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் உங்கள் கண்ணோட்டங்கள் அறிக்கையாகத் தரப்பட வேண்டும்.

சிந்தனை

பகுதி அ-வின் முந்திய செயல்களில் - நீராதாரம், பயன்பாடு மற்றும் தரம் - உள்ள பல்வேறு பிரச்சனைகள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

எந்தத் தண்ணீரை எதற்குப் பயன்படுத்துகிறோம்? ஒவ்வோர் ஆதாரத்திலிருந்தும் பெறப்படும் இயற்கை நீரிலுள்ளதைவிட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து பெறப்படும் நீரில் கரைந்துள்ள திடப்பொருள்கள் அதிகமாக உள்ளனவா?

உங்கள் பள்ளியின் நீர் மேலாண்மை மற்றும் பயன்பாடு நீடித்துக் பயன்தருவதா? இவ்வினா எந்தப்பொருளில் கேட்கப்பட்டுள்ளது? எதையாவது மாற்றத் தேவையுள்ளதா? அப்படியானால் எது? தண்ணீர் பயன்பாடு, நீராதாரங்களைக் கலத்தல், தரம் இவற்றை எவ்வாறு மாற்றுவது?

உங்கள் நீர் மேலாண்மை மற்றும் பயன்பாட்டை உங்கள் அருகிலுள்ள இடங்களில், பள்ளிகளில் நீங்கள் கண்டறிந்தவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாடறியவும்.

உங்கள் வளாகத்துக்குத் தண்ணீர் எப்படி கிடைக்கிறது? உலகளாவிய அளவிலும், உங்கள் பகுதியிலும் மழைப்பொழிவினைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

ஆழ்துளைக்கிணற்று நீர் எங்கிருந்து வருகிறது? நிலத்தடி நீர் எவ்வளவு உள்ளது? இந்நீரைப் பெற எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது.

வளாகத்தில் குழாய் நீர் கிடைத்தால் அது எங்கிருந்து வருகிறது? அதன் ஆதாரத்திலிருந்து உங்கள் பள்ளிக்கு அது வந்து சேர எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது.

கிணறு, ஆழ்துளைக்கிணறு, ஊராட்சி, நகராட்சி மன்ற நீர்வழங்கல் ஆகியவற்றுக்குச் செலவாகும் மின்சாரத்தைக் கணக்கிடவும்.

கிணற்றுக்குத் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? உங்கள் வளாகத்தில் கிணறு உள்ளதா?

உங்கள் வளாகத்திலிருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட மற்றும் கழிவுநீர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? கூர்ந்து நோக்கியும் மற்றவர்களோடு கலந்துரையாடியும் கண்டறியவும்.

வளாகத்திலுள்ள பல்வேறு தாவரங்கள், பூச்சிகள், விலங்கினங்கள் யாவை? அவற்றுக்கு எப்படிக் கிடைக்கிறது? நம்மைப் போல் கழிவுநீரை அவை ஏற்படுத்துகின்றனவா? இல்லையெனில் அவை எப்படி சமாளிக்கின்றன?.

கருவிப்பேழை / தொகுப்புரைத் தாள்

பள்ளி மற்றும் தொடர்பாளர் பெயர் :

அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் முழுமையான அஞ்சல் முகவரி தொடர்புத் தொலைபேசி எண் :

தொடர்பு மின்னஞ்சல் முகவரி :

மாணவர்கள் எண்ணிக்கை :

பணியாளர்கள் எண்ணிக்கை :

பள்ளி அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு (சதுர மீட்டரில்)

மாதமொன்றுக்குச் செலவாகும் மொத்த நீரின் அளவு (ஆயிரம் லிட்டரில்)

ஒவ்வோர் பயன்பாட்டுக்கும் மாதம்தோறும் செலவாகும் மொத்த நீரின் அளவு (ஆயிரம் லிட்டரில்)

மழைநீர்ச் சேகரிப்பு உட்பட ஒவ்வோர் ஆதாரத்திலிருந்து மாதம் தோறும் வழங்கப்படும் நீரின் அளவு மழைநீர்ச்சேகரிப்பு அமைப்பு இல்லையெனில் அதைத் தனியாகத் குறியிட்டுக் காட்டவும்.

தண்ணீர் மீள்பயன்பாடு : வளாகத்தில் தண்ணீர் மறு பயன்பாடு செய்யப்படுகிறதா? ஆம் எனில், எதற்காக எவ்வாறு?

தண்ணீர்த்தரம்

ஆதாரம்: விப்ரோ லிமிடெட், பெங்களூரூ