இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் இந்தியப் பெருங்கடலில் 2004 டிசம்பர் மாதத்தில் சுனாமி ஏற்பட்டதையடுத்து மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடல் தகவல் சேவைக்கான தேசிய மையத்தில் [Indian National Centre for Ocean Information Services (INCOIS), Hyderabad] இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் [Indian Tsunami Early Warning Centre (ITEWC)] மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. 2007 அக்டோபர் 15 முதல் செயல்படும் இந்த மையம் நில அதிர்வு, கடல் மட்டத்தைக் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பத்து நிமிடங்களுக்குள் சுனாமியுடன் நில நடுக்கம் குறித்து கண்டறிந்து வழிகாட்டு நெறிமுறைகளின் படி சுனாமி அறிவுரைகளை வழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.5 அல்லது அதற்கு அதிகமான ரிக்டர் அளவில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் 8 நிலநடுக்கங்கள் உட்பட 143 சுனாமியுடன் கூடிய நிலநடுக்கங்களை கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் இந்த மையம் விரிவாக மதிப்பீடு செய்து இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று உறுதிப்படுத்தியது. இந்த மையம் தொடர்ந்து உரிய நேரத்தில் சுனாமி எச்சரிக்கை அறிவுறுத்தல்களை அளித்து வருகிறது. அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 8 சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றுள்ளது. இவற்றில் இந்தியப் பெருங்கடல் பிராந்திய அளவில் 2023 அக்டோபர், 2025 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 2 பயிற்சிகள் நடைபெற்றன. அத்துடன், தேசிய மற்றும் மாநில அளவில் 6 சுனாமி ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்றுள்ளன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2226879®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்