இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை உலக அளவில் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யவும், எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை வேகமாக விரிவடைந்து வருகிறது. 2014-ம் ஆண்டில் 249 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறன், 2026 அக்டோபர் நிலவரப்படி சுமார் 560 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதில் 308 ஜிகாவாட், அதாவது 55% புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறப்படுகிறது. நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) திறனில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மேலும், 2024 ஜூலை முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில், இத்துறையில் 63.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியில் 2026 நவம்பர் 2 முதல் 5 வரை நடைபெற்ற இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாட்டில் 9 நாடுகளும், 13 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களும் பங்கேற்றன. சூரிய மின்சக்தித் திறன் 2014-ம் ஆண்டில் 2.8 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் சூரிய மின்சக்தித் (Solar Power) திறன், 2026 அக்டோபர் 31 நிலவரப்படி சுமார் 175 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் 37 ஜிகாவாட்டிற்கும் அதிகமான சூரிய மின்சக்தித் திறனை இணைத்து, இத்துறையில் உலகின் 2-வது பெரிய வளரும் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ், 2026 நவம்பர் 2 வரை 65.26 லட்சம் வீடுகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டு, ரூ.35,800 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 21 லட்சம் குடும்பங்கள் பூஜ்ஜிய மின்கட்டணப் பயனைப் பெற்றுள்ளன. மேலும், 5,000 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்களுக்காக ரூ.5,070 கோடி ஒதுக்கீட்டில் பிரதமரின் சூரிய சரோவர் திட்டத்திற்கு [Pradhan Mantri Surya Sarovar Yojana (PM-SSY)] ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி காற்றாலை மின் (Wind Energy) உற்பத்தித் திறனில் உலகளவில் 4-வது இடத்தில் உள்ள இந்தியா, 2026 அக்டோபர் 29 நிலவரப்படி 59.20 ஜிகாவாட் திறனை எட்டியுள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் அளவாக 6.05 ஜிகாவாட் புதிய திறன் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடல்சார் காற்றாலைத் திட்டங்களுக்கு ரூ.7,453 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயிரி எரிசக்தித் திறன் உயிரி எரிசக்தித் (Bio-Energy) திறன் 11.75 ஜிகாவாட்டாக உள்ள நிலையில், கோபர்தன் (GOBARdhan) திட்டத்தின் கீழ் 2026-27 முதல் 2035-36 வரை ரூ.23,731 கோடி ஒதுக்கீட்டில் தேசிய சுழற்சி உயிரி எரிசக்தித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீர் மின்உற்பத்தித் திறன் நீர் மின்உற்பத்தித் திறன் (Hydropower) 57.49 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதுடன், சிறிய நீர் மின்திட்டங்கள் மேம்பாட்டிற்காக ரூ.2,584.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் (National Green Hydrogen Mission) கீழ், 2030-க்குள் 5 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி இலக்குடன் ரூ.19,744 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் 5.5 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டுள்ளது. தேசிய புவிவெப்ப ஆற்றல் கொள்கை 2025 செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட தேசிய புவிவெப்ப ஆற்றல் கொள்கையின் (National Policy on Geothermal Energy) கீழ், 10,600 மெகாவாட் திறனைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொள்கை ஆதரவு, உள்நாட்டு உற்பத்தி மூலம் தற்சார்பு மிக்க, தூய்மை எரிசக்தியுடன் இணைந்த எதிர்காலத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335742®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்