தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறத்தின் கீழ், காஜியாபாத் இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட பசுமை நகராட்சி பத்திரத்தை வெற்றிகரமாக வெளியிட்டதன் மூலம் நிலையான உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதில் முன்னேறியுள்ளது. அதிநவீன மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வளர்ச்சிக்காக ரூ. 150 கோடியை திரட்டியுள்ளது. இது மற்றொரு உள்கட்டமைப்பு திட்டம் மட்டுமல்ல - இது தனது குடிமக்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான காஜியாபாத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு அம்சமாகும். முன்னெப்போதும் இல்லாத அளவில் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட அதிநவீன வசதியான மேம்பட்ட துணை நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்க இந்த நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பசுமை நகராட்சி பத்திரம் இந்தியாவின் நிதி சூழலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்தது. நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதற்கான நிலையான மாதிரியை வழங்குகிறது. மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசு ஆகியவற்றின் ஆதரவுடன், இந்தத் திட்டம் நீர் சுத்திகரிப்பு வசதி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள எதிர்கால நகரங்களுக்கான நிதி ஒழுக்கத்தை சுற்றுச்சூழல் பொறுப்புடன் இணைப்பதற்கான ஒரு திட்டமாகும். மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இந்த முயற்சியின் மையத்தில் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (TSTP) உள்ளது. இது மைக்ரோஃபில்ட்ரேஷன், அல்ட்ராஃபில்ட்ரேஷன், நானோஃபில்ட்ரேஷன் மற்றும் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) உள்ளிட்ட மேம்பட்ட கழிவு வடிகட்டுதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்ப அற்புதமாகும். இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் இணைந்து செயல்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீர் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்வதை உறுதிசெய்து, தொழில்துறை செயல்முறைகளில் மீண்டும் பயன்படுத்த ஏற்றதாக அமைகிறது. 40 MLD சுத்திகரிப்பு திறன் கொண்ட TSTP, காசியாபாத் முழுவதும் உள்ள 1,400க்கும் மேற்பட்ட தொழில்துறை அலகுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் 95 கி.மீ நீளமுள்ள பரந்த குழாய் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆலை கழிவு நீர் இனி வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. நகரத்தின் தொழில்துறையை ஆதரிக்கும் ஒரு மதிப்புமிக்க வளமாக மாற்றப்படுகிறது. நன்னீர் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. இந்தத் திட்டத்தின் வெற்றி அதன் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் சாதனைகளில் மட்டுமல்ல, அதன் புதுமையான நிதி அமைப்பிலும் உள்ளது. TSTP பொது நிறுவன -தனியார் நிறுவன கலப்பின வருடாந்திர மாதிரியின் (PPP-HAM) கீழ் 40% நகராட்சி நிதியுடன் உருவாக்கப்பட்டது. இந்த பொது-தனியார் கூட்டாண்மை அணுகுமுறை, நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதுடன், திட்டத்தின் செயல்படுத்தலை நெறிப்படுத்த உதவியது. பசுமைப் பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.150 கோடி திரட்டுவதில் GNN பெற்ற வெற்றி, நகரத்தின் நிலையான அணுகுமுறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியது மற்றும் நகர்ப்புற உள்ளூர் அமைப்புக்கு (ULB) ஒரு புதிய அளவிலான நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. GNN நிறுவனம் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, 9.5 MLD மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டது. இது நகர்ப்புற நீர் மேலாண்மையில் நகரத்தின் தலைமையை மேலும் நிலைநாட்டியது. காசியாபாத்தின் புதுமையான அணுகுமுறை உலக அரங்கில் கவனித்தை ஈர்த்துள்ளது. நீர் பாதுகாப்பு, மறுசுழற்சி மற்றும் நிலையான நீர் மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் ஒரு அங்கீகாரமான வாட்டர் டைஜஸ்ட் வேர்ல்ட் வாட்டர் விருதுகள் 2024-25 இல், சிறந்த நகராட்சி சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாட்டு விருதை GNN பெற்றது. மேம்பட்ட நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள், புதுமையான நிதி மாதிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அதன் முன்னோடி முயற்சிகளுடன், காஜியாபாத் இந்தியாவின் தூய்மையான, சாமர்த்தியமான மற்றும் மீள்தன்மை கொண்ட நகரங்களுக்கான தேடலில் முன்னணியில் உள்ளது. PIB