தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எரிசக்தி செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் நாட்டின் சாதனைகளை எடுத்துரைப்பது மற்றும் ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த தினத்தின் நோக்கங்களாகும். தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள், தேசிய எரிசக்தி செயல்திறன் புத்தாக்க விருதுகள் ஆகியவற்றை வழங்குவதோடு, தேசிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அளிப்பதும் இத்தினத்தின் முக்கிய அம்சங்களாகும் . நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் தேசிய எரிசக்தி செயல்திறன் புத்தாக்க விருதுகள் பள்ளி குழந்தைகளுக்கான தேசிய ஓவியப் போட்டி 5 பிரிவுகளை உள்ளடக்கிய 17 துறைகள் - தொழில், கட்டிடங்கள், போக்குவரத்து, நிறுவனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. 4, 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டில் எரிசக்தி சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டு தேசிய ஓவியப் போட்டியை மின் அமைச்சகம் தொடங்கியுள்ளது. பள்ளி, மாநில மற்றும் தேசிய அளவிலான மாணவர்களுக்கான ஓவியப் போட்டி பிரச்சாரத்தின் ஒரு நடவடிக்கையாக சேர்க்கப்பட்டுள்ளது, இது ஆற்றலைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றி குழந்தைகளுக்கு உணர்த்துவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் அவர்களின் பெற்றோருக்குக் கற்பித்தல் மற்றும் ஈடுபடுத்தும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்