பெண்கள் அடையக்கூடிய சிறப்பான லாபங்கள்

இந்திய புதுப்பிக்ககூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.இ.டி.ஏ.) , புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வள ஆதாரங்களை (என்.ஆர்.எஸ்.இ.) உபயோகப்படுத்தும் பெண்களை ஊக்கமளிக்கும் விதத்தில் பல உதவிகளைச் செய்ய முன் வருகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.ireda.in

பெண் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக

பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, மத்திய எரிசக்தி அமைச்சகம், அவர்களுக்கு சூரியஒளி விளக்கை இலவசமாக கொடுக்கவிருக்கிறது.

தேவைப்படும் தகுதிகள்

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் ஒரு பெண் குழந்தை

தேர்வு செய்யப்பட்ட சில முக்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வசதியில்லாத கிராமங்களில், குடிசைகளில் வசிக்கும் குடும்பங்கள்

ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பெண் குழந்தைகள்

இத்திட்டத்தின் கீழ் வரும் மாநிலங்கள்

அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், மேகாலயா, மிசோரம் , நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகள்.