சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition நிறுவனமானது ISO 9001:2015 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமையப் பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும், இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. American Council of Business-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. France நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2021-ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலகத் தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில் 14 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு B.Sc. Hospitality & Hotel Administration மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப்படிப்பும், மேலும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserie) பற்றிய படிப்பும் படிக்கலாம். படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்புக்கான கட்டணத் தொகையை தாட்கோ கல்விக்கடனாக வழங்கும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவிகள் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 25000 முதல் ரூ. 35000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ. 50000 முதல் ரூ. 70000 வரை ஊதியமாகப் பெறலாம். இப்படிப்பில் விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வரும் 14.09.2022-க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலாண்மை இயக்குநர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9