இன்னோவேஷன் இன் சயின்ஸ் பர்சூட் ஃபார் இன்ஸ்பைர்ட் ரிசர்ச் (Innovation in Science Pursuit for Inspired Research) என்னும் இன்ஸ்பைர் (INSPIRE) திட்டம் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகும். இன்ஸ்பைர் விருதுகள் - மனாக் (INSPIRE Awards - MANAK), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் - இந்தியா (National Innovation Foundation - India) மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ / மாணவிகள் அறிவியல் சார்ந்த படிப்புகள் படிக்க ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனை கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு அன்றாட சிக்கல்களுக்கு ஒரு மில்லியன் புதுமையான தீர்வுகளை உருவாக்குவது இத்திட்டத்தின் இலக்காகும். இன்ஸ்பைர் விருதுகள் - மனாக்கின் தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மாணவ / மாணவிகளின் புதுமையான சிந்தனைகள் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதாரம்: தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டி