பணியாளர் தேர்வு ஆணையம் 22.08.2023 அன்று " இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2023"-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ அமைப்புகளுக்கான குரூப், பி அரசிதழ் பதிவு பெறாத இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பு அலுவலர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், முதுநிலை மொழிபெயர்ப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்குக் கணினி அடிப்படையிலான திறந்த நிலை போட்டித் தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தவுள்ளது. பதவி விவரம், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை தேர்வாணைய இணையதளம் ssc.nic.in மூலம் மட்டுமே ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 12.09.2023 (23:00) மற்றும் ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 12.09.2023 (23:00). ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம், தொப்பி மற்றும் மூக்குக் கண்ணாடி அணியாமல் இருக்க வேண்டும். முகத்தின் முன் பகுதி தெளிவாகத் தெரிய வேண்டும். தென் மண்டலத்தில், ஆந்திராவில் 03 மையங்கள்; தமிழகத்தில் 03 மையங்கள்; தெலங்கானாவில் 01 என 07 மையங்கள் / நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு அக்டோபர் 2023-ல் நடைபெறும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்