தமிழ்நாட்டின் அரிய கலை வடிவங்களை மக்களிடையே கொண்டு செல்லவும், அவற்றை வளர்க்கவும், கலை வாய்ப்புகளை வழங்கி கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும், பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஆண்டுதோறும் 160 கலை நிகழ்ச்சிகளை "கலைச்சங்கமம் கலை விழா"வாக நடத்திட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகளும், இதர மாவட்டங்களில் 37 நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியினை 22.09.2022 அன்று மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரால் சென்னை அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 01.10.2022 முதல் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளி கலையரங்கில் வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலைச்சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இக்கலைவிழாவில் தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலை வடிவங்கள் மற்றும் சென்னை அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் என சென்னையில் வாழும் பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்க ஏதுவாக கலைச்சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. கரகாட்டம் காவடியாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரையாட்டம் மாடாட்டம் மயிலாட்டம் தப்பாட்டம் சாட்டை குச்சியாட்டம் மரக்காலாட்டம் நையாண்டி மேளம் பம்பை எருதுகட்டு மேளம் துடும்பாட்டம் கணியன்கூத்து கட்டைக்கூத்து தெருக்கூத்து வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9