2001-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அவர் ஆற்றிய சீரிய பணிக்காக ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் “கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது” வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த திரு.கோட்டை அமீர் அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் என்ற பதக்கத்தினை தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றிவரும் ஒருவருக்கு, அப்பதக்கத்தை, வழங்கி வருகிறது. ரூ. 25000-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 2025-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இவ்விருதானது 3/3" விட்டம் அளவுள்ள வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட ரூ.9,000/- மதிப்புடைய பதக்கம், ரூ.25,000/-க்கான பரிவுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் கொண்டதாகும். தகுதி மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பிக்கும் முறை பதக்கத்திற்குத் தகுதியானவரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது தமிழ்நாடு அரசு விருதுகள் இணைய முகப்பு மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம்-600009 சென்னை அவர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக அனுப்பிட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவார். முந்தைய ஆண்டு விருதாளர்கள் பட்டியலை பார்க்க https://awards.tn.gov.in/pre_awards.php?id=Mjg%3D# என்ற இணயதளத்தைப் பார்க்கவும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9