உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு2023ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2022) மாணவர் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு 12.04.2023 (புதன் கிழமை) அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். இப்பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைத்தளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். இப்பட்டயப்படிப்புக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ. 3100 ஆகும். கல்வித் தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு (S.S.L.C.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன், Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து அனுப்பப் பெறுதல் வேண்டும். விண்ணப்பம் (கட்செவி (WhatsApp) எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் 05.04.2023 ஆகும். மேலும் தகவல் பெற பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: இயக்குநர்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்இரண்டாம் முதன்மைச் சாலைமையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்தரமணி, சென்னை-600113தொலைபேசி: 044-22542992 வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9