இந்தியாவின் தலைசிறந்த வேளாண் பல்கலைக்கழகங்களில் முதன்மையான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பன்னிரெண்டு (12) இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 2022-2023 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை 28.06.2022 அன்று முதல் நடைபெறுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்: இளமறிவியல் (மேதமை) வேளாண்மை B.Sc. (Hons.) Agriculture இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை B.Sc. (Hons.) Horticulture இளமறிவியல் (மேதமை) வேளாண்மை (தமிழ் வழி) B.Sc. (Hons.) Agriculture (Tamil Medium) இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை (தமிழ் வழி) B.Sc. (Hons.) Horticulture (Tamil Medium) இளமறிவியல் (மேதமை) வனவியல் B.Sc. (Hons.) Forestry இளமறிவியல் (மேதமை) உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் B.Sc. (Hons.) Food, Nutrition and Dietetics இளம் தொழில்நுட்பம் வேளாண் பொறியியல் B.Tech. Agricultural Engineering இளமறிவியல் (மேதமை) பட்டு வளர்ப்பு B.Sc. (Hons.) Sericulture இளம் தொழில்நுட்பம் உணவு தொழில்நுட்பம் B.Tech. Food Technology இளம் தொழில்நுட்பம் உயிரித் தொழில்நுட்பம் B.Tech. Biotechnology இளம் தொழில்நுட்பம் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் B.Tech. Energy and Environmental Engineering இளமறிவியல் வேளாண் வணிக மேலாண்மை B.Sc. (Hons.) Agri Business Management உறுப்புக்கல்லூரிகளில் 2148 இடங்களுக்கும், இணைப்புக்கல்லாரிகளில் 2337 இடங்களுக்கும் இணையதளம் வாயிலாக 2022-2023 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பன்னிரெண்டு பாடப்பிரிவுகளுக்கும் ஒரே ஒரு இணைய வழி விண்ணப்பம் மட்டுமே போதுமானது. மாணவர்கள் https://tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக 27.07.2022-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2022-2023 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல் மற்றும் விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லூரியில் சேருவதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். மேலும், தெளிவு பெற 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவி சேவை எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேவைகளுக்கான பதில்களை ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்