நாட்டின் கைத்தறி நெசவாளர்களை கௌரவிப்பதற்கும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜூலை 2015 இல் மத்திய அரசு ஆகஸ்ட் 7 ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது. 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், இந்த நாள் குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இது உள்நாட்டு தொழில்களை, குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்தது. 11-வது தேசிய கைத்தறி தினம் 2025, ஆகஸ்ட் 7 கொண்டாடப்படும். பல்வேறு மாநிலங்களில் உள்ள 28 நெசவாளர் சேவை மையங்களிலும், 16 தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIFT) வளாகங்களிலும் தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய கைத்தறி தினம் கைத்தறி நெசவாளர்களை கௌரவிப்பதையும், நாட்டின் கலாச்சார, பாரம்பரிய மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதன் மூலம் கைத்தறித் தொழிலுக்கு ஊக்கம் மற்றும் பெருமை உணர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய கைத்தறி தினத்தன்று கைத்தறி துறையில் சிறந்து விளங்கும் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், கைத்தறி நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு கைத்தறி விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்