தேசிய விருது தளம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், முகமைகள் பல்வேறு விருதுகளை நிறுவியுள்ளன. இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில், பொதுவான தேசிய விருது தளம் www.awards.gov.in மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளில் மக்களின் மக்களை பங்களிக்க செய்யவும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் இந்தத் தளம் வழிவகுக்கும். இந்த விருதுகளுக்கு தனி நபர்கள், அமைப்புகளை மக்கள் பரிந்துரைக்க செய்வதே இத்தளத்தின் நோக்கமாகும். விண்ணப்பங்களைப் பெற திறந்திருக்கும் விருதுகள் பின் வரும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு: விருதுகள் விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது 2027Subhash Chandra Bose Disaster Management Award 2027 30.09.2026 ஜீவன் ரக்ஷா பதக் தொடர் விருதுகள் 2026Jeevan Raksha Padak Series of Awards 2026 30.09.2026 தேசிய கோபால் ரத்னா விருது 2026National Gopal Ratna Award 2026 30.09.2026 வீரதீரப் பதக்கம் - PMG/GM 2026Gallantry Medal - PMG/GM 2026 31.12.2026 ஆதாரம்: தேசிய விருது தளம்