தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை [Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)] 2020 ஆம் ஆண்டில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை [National Startup Awards (NSA)] அறிமுகப்படுத்தியது. இது புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெளிப்படுத்தும் ஸ்டார்ட்அப் சூழலில் சிறந்த ஸ்டார்ட்அப்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுக்கு வெகுமதியோடு அங்கீகாரம் அளிக்கிறது. இந்திய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பின் வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்ட்அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2025 தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2025 நாடு முழுவதும் உள்ள புதுமைகளைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. முக்கிய கருப்பொருள்கள் முழுவதும் அமிர்தகாலத்தின் செயல்பாடுகள் அடிப்படையில் அமைந்துள்ளன. இதில் ஸ்டார்ட்அப்கள் 20 பிரிவுகளில் வழங்கப்படயுள்ளது. அவை தற்போதைய இந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார மைய புள்ளிகள் பற்றிய முழுமையான ஆலோசனையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளன. விண்வெளி, சில்லறை விற்பனை மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களில் உள்ள கண்டுபிடிப்புகள் முதல் அதிக தாக்கத்தை மையமாகக் கொண்ட பிரிவுகள் வரை இதில் அடங்கும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் ஒரு நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2025 இன் வெற்றியாளர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களுக்கு முதலீட்டாளர் மற்றும் அரசு இணைப்பு, வழிகாட்டுதல், சர்வதேச சந்தை அணுகல், கார்ப்பரேட் மற்றும் யூனிகார்ன் இணைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பிரத்யேக ஆதரவு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு https://www.startupindia.gov.in/ காணவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்