தொழிலாளர் மேலாண்மை படிப்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை (M.A. Labour Management) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ - தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு (Post Graduate Diploma in Labour Administration), டி.எல்.எல். ஏ.எல். (வார இறுதி) - தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (Diploma in Labour Laws with Administrative Law) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல். ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல். ஏ.எல். ஆகிய பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணி புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட மேற்படிப்பு / பட்டயப் படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தகுதி விருப்பமுள்ள ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்காணும் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம், தங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200 SC / ST: ரூ. 100 (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் (பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு): 01.09.2021 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ. 200 (SC / ST ரூ. 100) வங்கி வரைவோலையினை “The Director, Tamil Nadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) முனைவர் இரா. ரமேஷ்குமார், ஆசிரியர் குழாம் தலைவர் கைபேசி எண்: 9884159410 தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்) அம்பத்தூர், சென்னை 600 098 தொலைபேசி எண்: 044 - 29567885 / 29567886 email: tilschennai@tn.gov.in ஆதாரம்: செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை