தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் (Tamil Nadu Institute of Labour Studies) கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன: பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு (B.A. Labour Management) எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்ட மேற்படிப்பு (M.A. Labour Management) பி.ஜி.டி.எல்.ஏ. தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப்படிப்பு [Post Graduate Diploma in Labour Administration (PGDLA) Part-Time Course] தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப்படிப்பு [Diploma in Labour Laws with Administrative Law (DLL & AL) Week End Course] பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது. பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, பி.ஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல். மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணி புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்டமேற்படிப்பு / பட்டயப்படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200SC / ST: ரூ. 100 (சாதிச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்) 20.06.2022 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ. 200 (SC / ST: ரூ. 100) வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால்/ விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022 ஆகும். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)முனைவர் இரா. ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர்அலைபேசி எண்: 9884159410தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்)அம்பத்தூர், சென்னை 600 098தொலைபேசி எண்: 044 - 29567885 / 29567886E-mail: tilschennai@tn.gov.in வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9