2023 குடியரசு தின விழாவில் அறிவிப்பதற்கான பத்ம விருதுகள் 2023க்கு இணையம் வழியாக விண்ணப்பித்தல் மற்றும் பரிந்துரை செய்வது மே 1, 2022 அன்று தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2022 ஆகும். விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் தேசிய விருது இணையப்பக்கம் www.awards.gov.in மூலமாகவே அனுப்பப்பட வேண்டும். இந்த விருது பெற விண்ணப்பிக்கின்றவர் அல்லது பரிந்துரைப்பவர் பொருத்தமான விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையப்பக்கத்தில் உள்ள படிவத்தில் (800 வார்த்தைகளுக்கு மிகாமல்) குறிப்பிட வேண்டும். சிறப்புமிக்க சாதனைகள், சம்பந்தப்பட்ட துறையில் சேவை, ஆகியவை பற்றி குறிப்பிட வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பிலான இணையதளத்திலும் www.mha.gov.in பத்ம விருதுகளுக்கான இணையப்பக்கத்திலும், www.padmaawards.gov.in பத்ம விருதுகளுக்கான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த விருதுகளுக்கான விதிமுறைகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையப்பக்கத்தில் கிடைக்கும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்