பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மாவட்டங்கள் மற்றும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரிக்கவும், பாராட்டவும் மற்றும் வெகுமதி அளிக்கவும் தொடங்கப்பட்டது. 11 முன்னுரிமைப் பிரிவுத் திட்டங்களின் கீழ் மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி. இந்தப் பிரிவில் 5 விருதுகள் வழங்கப்படும். சிறப்பாகச் செயல்படும் 'விருப்பார்ந்த வட்டாரங்களுக்கு' (Aspirational Blocks) பிரிவில் 5 விருதுகள் வழங்கப்படும். அடுத்ததாக, மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநிலங்கள், மாவட்டங்களுக்கான கண்டுபிடிப்புகள் மீது 6 விருதுகள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய தரவுகளின் தேவை மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள் www.pmawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்