தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை [Entrepreneurship Development and Innovation Institute (EDII)] வரும் 23.12.2022 (காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை) மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இணையவழி கருத்தரங்கத்தை [Digital and Marketing (Online)] நடத்த உள்ளது. இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் - இணையதளத்தை உருவாக்குதல் - டொமைன் பெயர் உருவாக்குதல் மற்றும் ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் நன்மைகளை விளக்குதல். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெருஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032தொலைபேசி எண்: 044-22252081 / 22252082கைபேசி எண்: 9677152265 / 8668102600 வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9