2022-2023 ஆம் கல்வியாண்டில் கீழ்க்கண்ட ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மருத்துவப் பட்டமேற்படிப்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி. யோகா மற்றும் இயற்கை (MD Yoga and Naturopathy) மருத்துவப் பட்டப்படிப்பு அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ். (BSMS) / பி.எ.எம்.எஸ். (BAMS) / பி.யு.எம்.எஸ். (BUMS) / பி.எச்.எம்.எஸ். (BHMS) மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மருத்துவப் பட்டப்படிப்பு சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ். / பி.ஏ.எம்.எஸ். / பி.எச்.எம்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மருத்துவப் பட்டயப்படிப்பு அரசு ஆயுஷ் பாராமெடிக்கல் (AYUSH Paramedical) பள்ளிகளில் உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (DIP) மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு (DNT) மேலே பட்டியலிடப்பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள் கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். படிப்புப் பிரிவுகள் படிப்பிற்கான காலம் கல்வித்தகுதி** ஒதுக்கீட்டு விவரம் அரசு ஒதுக்கீடு நிர்வாக ஒதுக்கீடு மருத்துவப் பட்டமேற்படிப்பு எம்.டி. யோகா மற்றும் இயற்கை 3 ஆண்டுகள் பி.என்.ஒய்.எஸ். மருத்துவப் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் (இந்திய மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், தேர்வுக்குழுவால் நடத்தப்படும்) மற்றும் மருத்துவப் பயிற்சியில் அனுபவம் ஆம் இல்லை மருத்துவப் பட்டப்படிப்பு பி.எஸ்.எம்.எஸ். பி.எ.எம்.எஸ். பி.யு.எம்.எஸ். பி.எச்.எம்.எஸ். அரசு மருத்துவக் கல்லூரி 5½ ஆண்டுகள் 10, +2 NEET UG 2022 ஆம் இல்லை சுயநிதி மருத்துவக் கல்லூரி ஆம் ஆம் பட்டயப்படிப்பு (ஆயுஷ்) ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி 2½ ஆண்டுகள் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்கள் எடுத்து முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆம் இல்லை **விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 12.10.2022 மாலை 5:30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். செயலாளர், தேர்வுக்குழுஇந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம்அரும்பாக்கம், சென்னை 600 106 அறிவிக்கை நாள் 21.09.2022 விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு பதிவிறக்கம் துவங்கும் நாள் 21.09.2022 முதல் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் 12.10.2022 மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 12.10.2022 மாலை 5:30 மணி வரை இயக்குநர்,இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9