பழங்குடியினர் நல அமைச்சகத்தின் (Ministry of Tribal Affairs) கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் [National Education Society for Tribal Students (NESTS)] ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கான Eklavya Model Residential Schools (EMRSs) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. டிஜிடி (TGT) மற்றும் விடுதிக் காப்பாளர் (Hostel Warden) பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஈ.எம்.ஆர்.எஸ் பணியாளர் தெரிவுத் தேர்வுக்கான [EMRS Staff Selection Exam (ESSE) -2023] அறிவிப்பை NESTS வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது. CBSE-யுடன் இணைந்து NESTS ESSE-2023 ஓ.எம்.ஆர் அடிப்படையிலான (பேனா காகிதம்) [OMR Based (Pen-Paper)] முறையில் நடத்தப்படுகிறது. பதவி காலியிடங்கள் டிஜிடி (TGT) 5660 விடுதிக் காப்பாளர் (Hostel Warden) 669 மொத்தம் 6329 இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பாடத்திட்டத்துடன் பிற விவரங்கள் emrs.tribal.gov.in. என்ற வலைதளத்தில் உள்ளன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் (EMRSs) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இணையதளம் 19.07.2023 முதல் 18.08.2023 வரை செயல்பாட்டில் இருக்கும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்