சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பாளர் உதவித்தொகைக்கான புதிய விண்ணப்பங்களை [Community Innovator Fellowship (CIF)] வரவேற்பதாக அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் (Atal Innovation Mission (AIM)), நித்தி ஆயோக் (NITI Aayog), 2022, டிசம்பர் 1 அன்று அறிவித்துள்ளது. முன்னேற விரும்பும் சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பாளர்களின் தொழில்முனைவோர் பயணத்திற்கு உதவிசெய்ய அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவ யுஎன்டிபி இந்தியாவுடன் (UNDP India) இணைந்து இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பாளர் உதவித்தொகை தற்போது 22 பேருக்கு வழங்கப்படுகிறது. 5 கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்பாளர் விண்ணப்பங்களுக்கு https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd8v1_D8DntoHPr9rSL1rBSeBCF2cUKgt4k-h4AiOVGV6BFBA/viewform என்ற இணையதளத்தைக் காணலாம். இது ஒரு வருட கால நிதியுதவித் திட்டமாகும், இதில் ஆர்வமுள்ள சமூக கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் சமூக-பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம். இது போதுமான உள்கட்டமைப்பு மற்றும் நிதியுதவி மூலம் அறிவு, வழிகாட்டுதல், சமூகத்தில் ஈடுபாடு ஆகியவை வளம்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் அடல் சமூக கண்டுபிடிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 9 மாநிலங்களில் இது போன்ற 14 மையங்கள் உள்ளன, மேலும் எதிர்காலத்தில் 36 மையங்களை அமைத்து எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படவுள்ளன. மேலும் தகவல்களுக்கு Community Innovator Fellowship வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்