சென்னை இலக்கியத் திருவிழா 06.01.2023 முதல் 08.01.2023 வரை மூன்று நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வுகளானது படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என நான்கு அரங்கங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் 100 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் இலக்கிய ஆளுமைகளும் உரையாடவுள்ளார்கள். மேலும் மூன்று நாட்கள் மாலை வேளையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. சென்னை இலக்கியத் திருவிழா 2023 அழைப்பிதழ் இத்திருவிழாவில் மூன்று நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்விலும் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பங்கு பெற விரும்புகிறவர்கள் சென்னை இலக்கியத் திருவிழா 2023 இணைப்பில் பதிவு செய்க! ஆதாரம்: தமிழ்நாடு அரசு