தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டிலும் நடத்த இருக்கின்றது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும் தெரிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைத்திடவும், நமது மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும், இன உணர்வினையும் அவர்கள் பெற்றிடவும் இப்போட்டிகள் வழிவகுக்கும். பேச்சுப் போட்டி விதிகள் போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும் சான்றிதழ்களும் கீழ்கண்டவாறு வழங்கப்படும். மாவட்ட அளவில் மாநில அளவில் முதல் பரிசு ரூ. 20000 முதல் பரிசு ரூ. 100000 இரண்டாம் பரிசு ரூ. 10000 இரண்டாம் பரிசு ரூ. 50000 மூன்றாம் பரிசு ரூ. 5000 மூன்றாம் பரிசு ரூ. 25000 தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற தகுதி உள்ளவர்கள். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் சார்பாக தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம். வருகின்ற 20.02.2023 ஆம் தேதிக்குள் மாணவர்களின் பெயர்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல்: smcelocution@gmail.comஅஞ்சல் முகவரி: திரு. D. ரவிச்சந்திரன் இ.ஆ.ப.உறுப்பினர் செயலர்மாநில சிறுபான்மையினர் ஆணையம்முதல் தளம், கலச மஹால், புராதன கட்டிடம்சேப்பாக்கம், சென்னை 600005 போட்டியில் பங்கேற்கும் மாணவர்களது மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும். போட்டிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஆணையத்தின் முடிவே இறுதியானது. போட்டிக்கான தலைப்புகள் தமிழ் "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" பெரியாரும் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம் கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராசர் அறிஞர் அண்ணாவின் "தமிழ்க் கனவு" கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும், மாநில உரிமைகளும் மீண்டும் அண்ணல் காந்தி அவதரிக்க வேண்டும்! வரலாறு தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது! ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியா! மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! தமிழ்நாட்டின் தியாக தீபங்களால் சுடர்விட்ட இந்திய விடுதலைப்போர்! இந்தியா நமது தேசம்! மனித நேயம் அதன் சுவாசம்!! நேரு கண்ட மதச்சார்பற்ற இந்தியா என் சமகால இளைஞர்களே..? சமூகநீதி காப்போம் சரித்திரம் படைப்போம் திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி ஆங்கிலம் India of My Dreams Save my Mother Earth! Do we need reservation in Judiciary? The Perils of jobless growth Serving Humanity is my Religion Independent Judiciary - The watch Dog of Democracy Freedom of Expression and the civilized society Women Empowerment Social Media -A blessing or a curse? Unity Not Uniformity Freedom of Religion - A basic human Right Social justice vs inequality Dravidian Ethos The roll of State Governments in Economic Development Regional aspirations a must for National progress தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி நடைபெறும் இப்போட்டிகளில் தங்களது நிறுவனங்களின் மாணவ - மாணவியர் சிறப்பாக பங்கேற்க ஏற்பாடு செய்து ஆணையத்தின் முயற்சிகள் வெற்றி பெற தங்களது மேலான ஒத்துழைப்பினைத் தரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9