தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ஒவ்வொரு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் (Government and Government Aided Engineering Colleges), அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள் (Departments) மற்றும் உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் (Self-Financing Engineering Colleges) ஆகியவற்றில் இளநிலைப் பொறியியல் (B.E.) மற்றும் தொழில்நுட்பப் (B.Tech.) பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு "தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை" நடைபெறுகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - பதிவு செய்யும் முறை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) முழுமையாக இணைய வழி விண்ணப்பப் பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் அமையும். விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல், தற்காலிக இடஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இடஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் ஆகிய அனைத்தும் இணைய வழியாகவே நடத்தப்படும். சான்றிதழ்கள் சரி பார்த்தல் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள “தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில்” (TFC) இணைய வழியாக விண்ணப்பதாரர்கள் இல்லாமல் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் எல்லா செயல்களையும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதள வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், எல்லா சேவைகளுக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். அங்கு அவர்களுக்குத் தேவையான எல்லா சேவைகளும் கிடைக்கும். முழுமையான இணையவழி கலந்தாய்வு கீழ்க்காணும் பல அடுத்தடுத்த கட்டங்களைக் கொண்டது. விண்ணப்பம் பதிவு செய்தல் மற்றும் அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தல் சமவாய்ப்பு எண் (Random Number) உருவாக்குதல் (By TNEA Authority) பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் இணையவழியாக சான்றிதழ் சரி பார்த்தல் (By TNEA Authority) தரவரிசை வெளியிடுதல் (By TNEA Authority) விருப்பமான கல்லூரியையும் மற்றும் பாடப்பிரிவையும் பதிவு செய்தல் குறிப்பிட்ட நாளில் தற்காலிக இடஒதுக்கீடு செய்தல் (By TNEA Authority) இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் (By Candidate) கல்லூரி அல்லது பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் (TFC) கல்லூரிக்கான கட்டணத்தைச் செலுத்தி உறுதி செய்தல் விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள எல்லா விபரங்களையும் அவை செய்யப்பட வேண்டிய நாட்களையும் உரிய நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்குமான முதற்படி, விண்ணப்பத்தை பதிவு செய்தல். அதை எவ்வாறு செய்வது என்பதை இந்த குறிப்பு விவரிக்கிறது. விண்ணப்பம் பதிவு செய்தல் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய என்னென்ன விவரங்கள் வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தும் விபரப்படிவம் (Data Sheet) இணையதளத்தில் கிடைக்கும். அதைப் பதிவிறக்கம் செய்து அதில் விபரங்களைப் பூர்த்தி செய்த பின் கணினியில் விவரங்களை வரிசையாக உள்ளீடு (Input) செய்தால், விரைவாகவும் சரியாகவும் செய்து முடிக்கலாம். TNEA உதவி மையத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னரே கணினியில் பதிவு செய்ய ஆரம்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவை ஆரம்பிக்கும் முன், மாணவர்கள் கீழ்கண்டவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அலைபேசி எண் (தங்களது அல்லது தங்களது பெற்றோருடையது) மின்னஞ்சல் முகவரி (இல்லையெனில் புதிதாக உருவாக்கவும்) கடன் அட்டை / பற்று அட்டை / இணையத்தின் வழி செலுத்தும் விவரங்கள்(அல்லது) வரைவு காசோலை “THE SECRETARY, TNEA” என்ற முகவரியில் CHENNAI – 25 இல் மாற்றத்தக்க வகையில் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் பதிவின் படிகள் User Registration (பயனாளர் விண்ணப்பப் பதிவு) Login (உள் நுழைதல்) Personal Information (சுய விவரங்கள்) Special Reservation Information (சிறப்பு இடஒதுக்கீடு விவரங்கள்) Scholarship Information (உதவித் தொகை விவரங்கள்) School of Study Information (பள்ளித் தகவல்கள்) Academic Information (கல்வித் தகுதி தகவல்கள்) Preview Application and Change Information (மீண்டும் சரி பார்த்து மாற்றுதல்) Payment of Registration Fees (விண்ணப்பப் பதிவு கட்டணம் செலுத்துதல்) Download Application in PDF விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தல் பயனுள்ள காணொலிகள் TNEA Registration Demo TNEA Certificate Upload Demo மேலும் விபரங்களுக்கு www.tneaonline.org வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை