"பாரத் ஸ்டீல் விருதுகள்" (Bharat Steel Awards), எஃகுத் துறையின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் சிறப்பான செயல்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய நிறுவனங்களையும் தனிநபர்களையும் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசின் எஃகு அமைச்சகம் எஃகுத் துறையில் செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக நிபுணர் விருதுகளை வழங்குகிறது. கீழ்க்கண்ட நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்: சிறப்புப் பங்களிப்பு விருது - தனி நபர் விருது நிறுவனம் செயல்திறன் விருது ஏற்றுமதி விருது பாதுகாப்பு விருது நிலைத்தன்மை விருது அணி சிறப்பான பங்களிப்பு விருது உள்நாட்டுமயமாக்கல் விருது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் வழிப் புத்தாக்க விருது பாதுகாப்பு விருது https://awards.gov.in இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும். விருதுகள் தொடர்பான தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் https://awards.steel.gov.in என்ற இணையத்தில் கிடைக்கும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்