வெளிப்படை தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக ஒரே தளத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், முகமைகளின் அனைத்து விருதுகளையும் ஒருங்கிணைத்து கொண்டு வர பொதுவாக தேசிய விருது இணையப்பக்கம் www.awards.gov.in மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விருதுகளுக்கு தனிநபர்களை அல்லது நிறுவனங்களை பரிந்துரை செய்யும் குடிமக்கள் அல்லது அமைப்புகளுக்கு இந்த இணையப்பக்கம் வசதி செய்கிறது. தற்போது கீழ்காணும் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் கடைசி தேதி பத்ம விருதுகள் 15.09.2022 வன வளத்தில் சிறப்பாக செயல்பட்டோருக்கான தேசிய விருது 2022 30.09.2022 தேசிய கோபால் ரத்னா விருது 2022 15.09.2022 தேசிய தண்ணீர் விருதுகள் 2022 15.09.2022 மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது 2022 29.08.2022 தனிநபர் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2021 28.08.2022 தனிநபர் சிறப்பு செயல்பாட்டுக்கான தேசிய விருது 2022 28.08.2022 மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருது 2021 28.08.2022 மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருது 2022 28.08.2022 தேசிய சிஎஸ்ஆர் விருதுகள் 2022 31.08.2022 நாரி சக்தி விருது 2023 31.10.2022 சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது 2023 31.08.2022 மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறையில் சிறந்த சேவைக்கான தேசிய விருது 2022 29.08.2022 ஜீவன் ரக்ஷா பதக்கம் 30.09.2022 மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பம் செய்வதற்கும் தேசிய விருதுகள் இணையதளத்தை www.awards.gov.in காணவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்