2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்கள் மற்றும் உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறும் வகையில் பிரமாண்ட கலைவிழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவில் (Pen Drive) பதிவு செய்து கலை பண்பாட்டுத்துறையின் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்குத் தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள நம்ம ஊரு திருவிழாவின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். கலைக்குழுக்கள் பின்வரும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து 13.12.2022-க்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்தக் குழுவிலும் பங்கேற்கக்கூடாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. வ.எண் மண்டலம் மாவட்டங்கள் முகவரி / தொடர்பு எண் 1 காஞ்சிபுரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உதவி இயக்குநர்மண்டலக் கலை பண்பாட்டு மையம்சதாவரம், கோட்டை காவல் (கிராமம்)சின்ன காஞ்சிபுரம், ஓரிக்கை (அஞ்சல்)காஞ்சிபுரம் 631502தொலைபேசி: 044 27269148 2 சேலம் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உதவி இயக்குநர்மண்டலக் கலை பண்பாட்டு மையம்தளவாய்பட்டி-திருப்பதி கவுண்டனூர் சாலைஅய்யம்பெருமாம்பட்டி (அஞ்சல்)சேலம் 636302தொலைபேசி: 0427 2386197 3 தஞ்சாவூர் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உதவி இயக்குநர்மண்டலக் கலை பண்பாட்டு மையம்மண்டல கயிறு வாரியம் அலுவலகம் அருகில்வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி அஞ்சல்தஞ்சாவூர் 613403தொலைபேசி: 04362 232252 4 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உதவி இயக்குநர்மண்டலக் கலை பண்பாட்டு மையம்எண் 32, நைட்சாயில் டெப்போ சாலைமூலத்தோப்பு, மேலூர் ரோடுஸ்ரீரங்கம், திருச்சிராபள்ளி 620006தொலைபேசி: 0431 2434122 5 மதுரை மதுரை, திண்டுகல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உதவி இயக்குநர்மண்டலக் கலை பண்பாட்டு மையம்பாரதி உலா முதல் தெருதல்லாகுளம், மதுரை 625002தொலைபேசி: 0452 2566420 6 திருநெல்வேலி திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உதவி இயக்குநர்மண்டலக் கலை பண்பாட்டு மையம்870/21 அரசு அலுவலர் ஆ குடியிருப்புதிருநெல்வேலி 627007தொலைபேசி: 0462 2553890 7 கோயம்புத்தூர் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உதவி இயக்குநர்மண்டலக் கலை பண்பாட்டு மையம்தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகம்செட்டிபாளையம் பிரிவு ரோடுமலுமிச்சம்பட்டி அஞ்சல்கோயம்புத்தூர் 640150தொலைபேசி: 0422 2610290 இயக்குநர்கலை பண்பாட்டுத்துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9