2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 13-வது தேசிய வாக்காளர் தினம் தொடர்பான வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் [Systematic Voters' Education and Electoral Participation (SVEEP)] செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, வருங்கால வாக்காளர்களின் தேர்தல் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தியத் தேர்தல்கள் மற்றும் பொது அறிவு (ஒவ்வொன்றும் 50%) குறித்து மாநில அளவிலான வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் 2 மாணவர்கள் வரை பங்கேற்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சிறந்த இரண்டு அணிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முதல்நிலை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறாக மொத்தம் 76 அணிகள் முதல்நிலை போட்டியில் பங்கேற்கும். முதல்நிலை, அரையிறுதி மற்றும் இறுதி நிலைப் போட்டிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 10.01.2023 மற்றும் 11.01.2023 ஆகிய நாட்களில் காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் 3 சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானது. தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9