மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்குமாறு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இவ்விருது சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 2023, டிசம்பர் 3 அன்று வழங்கப்பட உள்ளது. பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தலுக்காக செயல்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பரிந்துரைகளை 2023 ஜூன் 15 முதல் 2023 ஜூலை 31 வரை ஆன்லைன் மூலம் மட்டும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும். இதற்கான பரிந்துரைகளை http://awards.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடலாம். உள்ளே நுழைய A225104546கடவுச்சொல் Aum0254t 157 ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்