மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்டு சுதந்திர தின விழா அன்று வழங்கப்படும். வ.எண் விருதின் வகை விருது விவரம் 1 மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம்ரூ. 25000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்(மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்) 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம்ரூ. 50000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூகப் பணியாளர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாநில விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9