யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பு தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி சார்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ் (B.N.Y.S.) மருத்துவ பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை www.tnhealth.tn.gov.in வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலிருந்தோ அல்லது கல்லூரிகளிலிருந்தோ வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பக் கட்டணம் விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவம் ரூ. 500. சிறப்பு பிரிவு விண்ணப்பம் ரூ. 100 (ஒவ்வொரு சிறப்பு பிரிவிற்கும்). பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவத்தை தபால் / கூரியர் சேவையின் மூலமாகவோ, நேரிலோ சமர்பிக்கும் போது விண்ணப்பக் கட்டண தொகையான ரூ. 500 SBI Collect வழியே செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணைப்புகளுடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்ட ஆவண நகலுடனும் (e-receipt) இறுதி நாளுக்கு முன் வந்து சேர்ந்திட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம் / பட்டியல் இனம் (அருந்ததியினர்) / பழங்குடி இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்திற்கான தொகை ரூ. 500 செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். சிறப்பு பிரிவினர் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் விளையாட்டு வீரர்கள் மாற்று திறனுடையோர் யூனியன் பிரதேசம் / பி.என்.ஒய்.எஸ் கற்பிக்கும் கல்லூரிகள் இல்லா மாநில மாணவர்கள் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மேற்கூறிய பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவத்துடன் சிறப்பு பிரிவிற்கான சிறப்பு பிரிவு படிவத்தினை பூர்த்தி செய்து சிறப்பு விண்ணப்பக் கட்டண தொகையான ரூ. 500 SBI Collect வழியே செலுத்த வேண்டும். சிறப்பு விண்ணப்பக் கட்டண தொகையான ரூ. 100 ஒவ்வொரு சிறப்பு பிரிவிற்கும் தனித்தனியாக அதிகபட்சம் மூன்றிற்கு மிகாமல் சிறப்பு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்ட ஆவண நகலுடன் (e-receipt) இணைத்து ஒரே உறையில் சமர்ப்பிக்க வேண்டும். முதல் பட்டதாரி விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் அவர்கள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு சான்றிதழ்களை பெற்று அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன்பிறந்தோர் இந்த சலுகையை பயன்படுத்தியிருக்கக் கூடாது. விண்ணப்பிக்கும் முறை நிறைவு செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து தபால் அல்லது கூரியர் மூலமாக வந்து சேரவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ வேண்டும். செயலாளர், தேர்வுக்குழுஇந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம்அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்அரும்பாக்கம், சென்னை - 600 106 அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலதாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல்துறை மற்றும் கூரியர் நிறுவனத்தில் கடைசி நாளுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் வந்து சேரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது குறித்து எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்பட மாட்டாது. இணையதளம் தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை www.tnhealth.tn.gov.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கட்டணத் தொகை செலுத்தப்பட்ட ஆவண நகலுடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் ஆதாரம்: தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு