கம்பு பணியாரம் தேவையான பொருட்கள் கம்பு - 200 கிராம்பச்சரிசி - 200 கிராம்உளுந்து - 50 கிராம்மண்டை வெல்லம் - 200 கிராம்ஏலக்காய் - 4முந்திரி - 20 கிராம்எண்ணெய் - தேவையான அளவு செய்முறை கம்பு, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் போன்ற பொருட்களை 12 நேரம் ஊறவைத்து பின்பு நன்றாகக் கழுவி நீரை நன்றாக வடிகட்டி மிக்ஸியில் அரைத்து அளவான உப்பு சேர்த்துக் கொள்ளவேண்டும். பின் மண்டை வெல்லத்தை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டிய பின் அரைத்த மாவில் ஊற்றி, ஏலக்காய் முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாகக் கிளறி, பின் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் விட்டு பணியாரமாக ஊற்றி எடுத்து பரிமாறலாம். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை