கைக்குத்தல் அரிசி வடை தேவையான பொருட்கள் கைக்குத்தல் அரிசி மாவுராகி மாவு - ஒரு கிலோவெங்காயம் - அரை கிலோசீரகம் - 25 கிராம்மிளகாய் - 10முருங்கைக் கீரை - சிறிதளவுஎண்ணெய் - அரை லிட்டர்உப்பு - சிறிதளவு செய்முறை ராகி மாவை சுத்தமாக சலித்து அதனுடன் கைக்குத்தல் அரிசி மாவையும் கலந்து அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், முருங்கைக் கீரை, சீரகம், உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டிப்போட்டு பொரித்தெடுக்கவும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை