சோளப் பணியாரம் தேவையான பொருட்கள் சோளம் - 100 கிராம்உளுந்து - 25 கிராம்வெந்தயம் - 5 கிராம் செய்முறை சோளம், உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பது போன்று அரைத்து புளிக்கவைக்க வேண்டும். பின்பு வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து பணியாரம் சுட்டால் காரப் பணியாரம். மாற்றாக தேவைக்கேற்ப பனை வெல்லத்தை சேர்த்து கரைத்து பாகு செய்து கலக்கி பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை