சௌசௌ சாமை கோதுமை தண்ணீர் பூரி தேவையான பொருட்கள் சாமை மாவு - 150 கிராம்கோதுமை மாவு - 50 கிராம்செளசெள - 150 கிராம்உப்பு - சிறிதுதேங்காய் துருவல் - ஒரு மூடிவெல்லம், பேரிச்சை - 100 கிராம்முந்திரி, பாதாம் - 50 கிராம் செய்முறை ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் சுடும் தண்ணீர் பூரி. பால், எண்ணைய், தண்ணிரில் மாவைப் பிசைவதற்கு பதில் செளசெளவைக் கழுவி சிறிதாக வெட்டி நீர் விட்டு அரைத்து வடிகட்டவும். அந்த செளசௌ சாற்றில் சாமை மாவு மற்றும் கோதுமை மாவைக் கலந்து சிறிது உப்பு சேர்த்து பிசைந்து அடிக்கவும். ஓரிரு மணி நேரம் கழித்து சிறு உருண்டைகளாக்கி வட்ட வடிவில் உருட்டவும். கண் கரண்டி அளவு வட்டமாக உருட்டினால் போதுமானது. மூணு லிட்டர் பாத்திரத்தில் முக்கால் பாகம் நீர் ஊற்றி அடுப்பில் கொதிக்கவிடவும். எண்ணைக்கு பதில் கொதி நீரில் உருட்டி மாவை கண்கரண்டியில் மெதுவாக கொதிநீரில் 2 நிமிடம் வேக விடவும். பின் அப்படியே மேலே தூக்கி தண்ணீரை வடித்து தட்டில் போடவும். எண்ணை பூரி போல் இது உப்பாது. இப்போது இதன் மேல் தேங்காய் துருவல், வெல்லத் தூள், பேரீச்சை துண்டுகள், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் துண்டுகளைத் தூவி உருட்டி மடக்கி பூரி போல் சாப்பிட பரிமாறலாம். நீர் கொதிக்கும்போது மாவைப் போடக் கூடாது, கரைந்துவிடும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை