மக்காசோளம் காய்கறி உப்புமா தேவையான பொருட்கள் மக்காச்சோளம் ரவை - 100 கிராம்கேரட் - 100 கிராம்பீன்ஸ் - 100 கிராம்முருங்கைக்கீரை - 50 கிராம்வெங்காயம் - 100 கிராம்கடலைப் பருப்பு - 10 கிராம்எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு, உப்பு - தேவையான அளவு செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காரட், பீன்ஸ், முருங்கைக்கீரை, கடலைப் பருப்பு போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மக்காச்சோள ரவையைப் போட்டு வெந்தவுடன் இறக்க வேண்டும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை