முளைக் கம்பு / வரகு பச்சைப்பயிறு வெண்பொங்கல் தேவையான பொருட்கள் முளைக் கம்பு - 100 கிராம்முளை பச்சைப்பயறு - 100 கிராம்மிளகு, சீரகம் - 40 கிராம்இஞ்சி, பூண்டு, மல்லி, கருவேப்பிலை - சிறிதளவுமுந்திரி, பாதாம் - 20 கிராம்தேங்காய், நெய் - தேவையெனில் சேர்க்கலாம் செய்முறை முளைக் கம்பு வரகு, பச்சை பயறை லேசாக இடித்து அப்படியே 200 மில்லி நீர் சேர்த்து மண்பானையில் வைத்து சமைக்கலாம். நன்றாகக் கிளறி விடவும். நசுக்கிப் பார்த்தால் வெந்த நிலை புரிபடும் - தேவையெனில் தேவையான நீர் விடலாம். தேவையான சட்னி சாம்பாரை இத்துடன் இணைத்து பரிமாறலாம். இதே போல் தினை, குதிரைவாலி பச்சைப் பயறு பொங்கல், தினை சாமை பொங்கல், சாமை வரகு பச்சைப் பயறு மிளகு பொங்கல் என விதவிதமாக செய்யலாம். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை