வரகு தக்காளி சாதம் தேவையான பொருட்கள் வரகு அரிசி - 1/2 கிலோதக்காளி - 200 கிராம்வெங்காயம் - 100 கிராம்மிளகாய்த் தூள் - சிறிதுதனியாத் தூள் - 3 டீஸ்பூன்புளி - 7.5 கிராம்உப்பு, பூண்டு, இஞ்சி - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுகொத்தமல்லி - ஒரு கட்டுபச்சை மிளகாய் - 10 கிராம்பட்டை, இலவங்கம் - 2 செய்முறை வரகு அரிசியை நன்கு சுத்தம் செய்து கல் இல்லாமல் அரித்து எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடுகு, உளுந்து போட்டு தாளித்து விட்டு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது, பாதி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் மீதமுள்ள வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், புளிக்கரைசல், உப்பு போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். நன்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பிறகு ஒரு பங்கு வரகு அரிசிக்கு 1/2 பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, செய்து வைத்துள்ள தக்காளி கலவையைப் போட்டு நன்கு கலந்து பரிமாற வேண்டும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை